• Fri. May 3rd, 2024

மதுரையில் பொன் விழா எழுச்சி மாநாட்டில் 10 லட்சம் பேர் திரண்டார்கள் என்ற வரலாற்றை உருவாக்க வேண்டும்..! சிவகாசியில் ஆலோசனைக்கூட்டத்தில் தலைமை கழக நிர்வாகிகள் பேச்சு…

மதுரையில் ‘வீர வரலாற்றின் பொன் விழா எழுச்சி மாநாட்டில் 10 லட்சம் பேர் திரண்டார்கள் என்ற வரலாற்றை உருவாக்க வேண்டும் என்று சிவகாசியில் நடைபெற்ற கழக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டத்தில் தலைமை கழக நிர்வாகிகள் பேசினர்.

அண்ணா திமுக சார்பில் வரும் ஆக. 20-ம் தேதி மதுரையில் ‘வீர வரலாற்றின் பொன் விழா எழுச்சி மாநாடு’ என்ற பெயரில் மாநாடு நடைபெறுகின்றது. அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற பிறகு அதிமுகவின் முதல் மாநில மாநாடு மதுரை ரிங் ரோட்டில் உள்ள கருப்பசாமி கோயில் எதிரே நடைபெறும் இந்த மாநாட்டில் திரளாக பங்கேற்பது குறித்து ஒருங்கிணைந்த விருதுநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நடைபெற்றது. அதிமுக அமைப்புச் செயலாளரும் விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமை வகித்தார். விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். ஆலோசனைக் கூட்டத்தில் கழகத் துணைப் பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.பி.முனுசாமி, கழகப் பொருளாளரும் திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன், கழகத் துணைப் பொதுச் செயலாளரும் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட கழகச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான நத்தம் இரா. விசுவநாதன், கழக அமைப்புச் செயலாளரும் ஈரோடு புறநகர் மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன், கழக அமைப்புச் செயலாளரும் நாமக்கல் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பி.தங்கமணி, கழக தலைமை நிலைய செயலாளரும் கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. வேலுமணி, கழக அமைப்புச் செயலாளரும் விழுப்புரம் மாவட்ட கழகச் செயலாளரும் முன்னாள் அமைச்சர்ருமான சி.வி. சண்முகம் எம்பி, கழக மகளிர் அணி செயலாளரும் கழக செய்தி தொடர்பாளர் முன்னாள் அமைச்சருமான வளர்மதி, கழக அமைப்புச் செயலாளரும் மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு, கழகப் புரட்சித்தலைவி பேரவை செயலாளரும் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், கழக அமைப்புச் செயலாளர் கருப்பசாமிபாண்டியன், கழக அமைப்புச் செயலாளரும் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழகச் செயலாளருமான ராஜன்செல்லப்பா, கழக இளைஞர் பாசறை இளம்பெண்கள் பாசறை செயலாளர் பரமசிவம் மற்றும் தலைமை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர்.

மாநாட்டிலே 10 லட்சம் பேர் திரண்டார்கள் என்ற வரலாற்றை உருவாக்க வேண்டும் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு

கூட்டத்தில் தலைமை வகித்து முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசும்போது,
விருதுநகர் மாவட்டத்திற்கு ஆலோசனை வழங்குவதற்காக வண்டி எடுத்து வாகனங்களை ஏற்றி பாதுகாப்பாக எப்படி கட்சி நிர்வாகிகளை அழைத்து வரவேண்டும் அவர்களுக்கு எப்படி பக்கபலமாக நிர்வாகிகள் இருக்க வேண்டும் என்பதை எடுத்துச் சொல்வதற்காக ஆலோசனை வழங்குவதற்காக 13 பேர் தலைமை கழக நிர்வாகிகள் வந்திருக்கிறார்கள். மூத்த நிர்வாகிகள் கழகத்தில் செயல்பாட்டில் அனுபவம் கொண்ட நிர்வாகிகள் அவர்கள் சொல்லுவதை நாம் கேட்பது தயாராக இருக்கிறோம். நாம் எத்தனை வாகனங்களில் மாநாட்டிற்கு செல்கிறோம் என்ற வாகன பட்டியலை தலைமை கழக நிர்வாகிகளிடம் ஒப்படைத்திருக்கின்றோம். இன்னும் வண்டிகளை எடுக்க வேண்டும் என்று எங்களுக்கு உத்தரவிட்டிருக்கிறார்கள். அதையும் செய்வதற்கு தயாராக இருக்கின்றோம். கட்சி நிர்வாகிகள் தொண்டர்களை அழைத்து வருகின்ற பொழுது பாதுகாப்பாக அழைத்து வர வேண்டும். எடப்பாடியார் எண்ணமும் அதுதான். யாரும் கோஷம் போட்டு காரசாரமாக போகாமல் நியாயமாக தர்மமாக நம்முடைய இலக்கை நோக்கி செல்ல வேண்டும். மதுரை மாநாடு நிச்சயம் மிகப்பெரிய திருப்பத்தை தரும். எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சர் ஆக வேண்டும் மாநாடு வெற்றி பெற வேண்டும். அதற்கு தேவையான கோஷங்களை எழுப்பி நம்மை கண்டு மாற்றான் பயப்பட கூடிய நாம் சந்தோசப்படக்கூடிய அளவுக்கு நம்முடைய ஊர்வலமும் மாநாடு செல்கின்ற பாங்கும் அமைய வேண்டும். இதைத்தான் எடப்பாடி யார் சொல்லிக் கொண்டிருக்கின்றார். எந்த இடத்திலும் எந்த பிரச்சினையும் இல்லாமல் மாநாட்டிலே 10 லட்சம் பேர் திரண்டார்கள். 10 லட்சம் பேர் திரும்பி சென்றார்கள் என்று செய்திதான் கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடியாருக்கு கிடைக்க வேண்டும் ஆகவே நிர்வாகிகள் எல்லா கிளைக் கழக செயலாளர்களும் எல்லா ஊராட்சி கழகத்துடைய முன்னாள் செயலாளர்களும் எல்லா ஊராட்சி மன்ற தலைவர்கள் கவுன்சிலர்கள் ஒன்றிய நகர கவுன்சிலர்கள் பொறுப்பாளர்கள் ஒன்றிய கழக பொறுப்பாளர்கள் நகரக் கழக பொறுப்பாளர்கள் மாவட்ட கழக பொறுப்பாளர்கள் ஒருங்கிணைந்த மாவட்டத்தின் அதிமுக நிர்வாகிகளும் இன்றைக்கு ஒரு துடிப்போடு இருக்கிறார்கள். ஒரு பிடிப்போடு இருக்கிறார்கள். அண்ணா திமுக ஆள வேண்டும் புரட்சித்தலைவர் கண்ட இயக்கம் ஆள வேண்டும் புரட்சித்தலைவி அம்மா கண்ட இயக்கம் ஆள வேண்டும் எடப்பாடியார் ஆட்சி மீண்டும் வர வேண்டும் அதை சரியான நேரத்தில் நாம் பயன்படுத்திக் கொண்டு வருகின்ற நாடாளுமன்ற தேர்தலோ சட்டமன்ற தேர்தலோ எது வந்தாலும் அனைத்து தொகுதியிலும் அதிமுக வெற்றி பெற்றது என்ற வரலாற்றை நாம் உருவாக்க வேண்டும். மாநாடு வெற்றியடைய நம்முடைய பங்களிப்பு அதிகமாக இருக்க வேண்டும். மாநாடு வெற்றி அடைய வேண்டும். இனி ஒருவன் பிறந்து தான் வரவேண்டும் என்ற ஒரு நிலையை உருவாக்க வேண்டும். மாநாட்டிற்கு சென்று அருமையான நிகழ்ச்சியை கலந்து கொண்டு எடப்பாடியார் புகழுக்கு பெருமை சேர்ப்போம் அவரை மீண்டும் முதலமைச்சர் ஆக்குவோம் என்று பேசினார்.

அதிமுக வெற்றி வரலாற்றில் ஒரு மைல் கல்லாக
மதுரை பொன்விழா எழுச்சி மாநாடு அமையும்
கழக துணைப்பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி பேச்சு

கூட்டத்தில் கழகதுணைப்பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.முனுசாமி பேசும்போது, அதிமுகவின் மதுரை மாநாட்டை எப்படி வெற்றி மாநாடாக அமைக்க வேண்டும் என்று ஒவ்வொறு மாவட்டமாக ஆலோசனைக்கூட்டம் நடத்த கழக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனையின்படி இந்த ஆலோசனைக்கூட்டம் நடைபெற்று வருகின்றது. இந்த மதுரை மாநாடு மிகவும் முக்கியத்தவம் வாய்ந்த மாநாடு. அதிமுக அடுத்த 100ஆண்டுகள் ஆட்சி பொறுப்பில் இருக்கும் என்ற சொன்ன இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வாக்கை மெய்ப்பிக்க வேண்டும் என்று சொன்னால் நாம் சிறப்பாக செயல்பட வேண்டும். தொண்டா்களின் பலத்தால் அதிமுக பலம் பெற்று வருகிறது. 2024 மக்களவைத் தோ்தல் குறித்து திமுகவுக்கு பயம் வந்துவிட்டது. ஆட்சிக்கு வந்த 26 மாதங்களில் திமுக செயல்பாட்டின் காரணமாக மக்கள் செல்வாக்கை திமுக இழந்து விட்டது. இதனால், முதல்வா் மு.க.ஸ்டாலின் பதற்றத்தில் ஏதேதோ அறிவிப்புகளை வெளியிடுகிறா்ா. ஒவ்வொறு மாவட்டமாக நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டி ஸ்டாலினே நேரடியாக செல்கின்றார். காரணம், வரும் நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி பயம் வந்து விட்டது. அதிமுக 4ஆக பிரிந்து இருக்கின்றது என்று சட்ட மன்றத்திலும் கட்சி கூட்டத்திலும் ஸ்டாலின் கூறினார். அதிமுக சிதைந்து கிடக்கின்றது என்று கூறினார். இன்று 2கோடி தொண்டர்களை உருவாக்கிய நமது கழக பொதுச்செயலாளர் எடப்பாடியார் மீண்டும் தமிழக முதலமைச்சராக வர வேண்டும். ஆளும் கட்சியின் தவறுகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸட் கட்சி தவிற மற்ற கட்சிகள் மவுனம் காக்கின்றன. மக்களவை, சட்டப்பேரவைத் தோ்தல்களில் அதிமுக வெற்றிபெறும் வகையிலும், கட்சியின் வெற்றி வரலாற்றில் ஒரு மைல் கல்லாகவும் மதுரை பொன்விழா எழுச்சி மாநாடு அமையும். முதல்வா் ஸ்டாலின் தலைமையிலான மோசமான ஆட்சியால் திமுக தனது செல்வாக்கை இழந்து வருகிறது . நான் சென்ற பிறகும் அ.தி.மு.க. 100 ஆண்டுகள் நிலைத்து இருக்கும் என்று ஜெயலலிதா கூறினார். அதனை உறுதி செய்யத்தான் மதுரையில் அ.தி.மு.க. மாநாடு. மதுரை மாநாடு வெற்றி மாநாடாக அமைய வேண்டும். விருதுநகர் மாவட்டத்தில் 7 சட்டமன்ற தொகுதி கள் உள்ளது. ஒவ்வொரு தொகுதிக்கும் சுமார் 10 ஆயிரம் பேர் கலந்து கொள்ள வேண்டும். மதுரை மாநாட்டில் 20 லட்சம் பேர் வரை கலந்து கொள்வார்கள். பிரதமர் மோடியின் நன்மதிப்பை எடப்பாடி பழனிச்சாமி பெற்றுள்ளார். மீண்டும் மோடி பிரதமராவார். இந்திய அரசியலில் மிகப்பெரிய புயல் மையம் கொண்டுள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அடுத்த பிரதமர் யார்? என்பதை தமிழ்நாடுதான் முடிவு செய்யும். அகில இந்திய அளவில் ஒரு கூட்டணியில் மு.க.ஸ்டாலின் இடம் பெற்றுள்ளார். அதேபோல பா.ஜ.க.வும் அ.தி.மு.க.வும் கூட்டணி அமைத்துள்ளது. எடப்பாடி பழனிசாமியை மையப்படுத்திதான் கூட்டணி அமைந்துள்ளது. அந்த கூட்டணியில் மு.க.ஸ்டாலினுக்கு உள்ள முக்கியத்துவத்தை விட அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மோடி முக்கியத்துவம் அளித்துள்ளார். மோடி தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி 2-வது இடத்தில் அமர்ந்தார். மதுரையில் நடைபெற உள்ள மாநாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். வரும் நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றுவிட்டது என்பதை நிரூபிக்கும் வகையில் மதுரை மாநாடு அமைய வேண்டும் என்று பேசினார்.

ஜாதி அரசியல் செய்யும்
ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரன்
முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் குற்றச்சாட்டு

கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசும்போது,
53 ஆண்டுகளுக்கு முன்னர் சுயேட்சை சின்னத்தில் போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளருக்கு தேர்தல் கமிஷன் தான் இரட்டைஇலை சின்னத்தை ஒதுக்கியது. இன்று வரை தமிழகத்தை அதிக முறை ஆண்ட பெருமை அ.தி.மு.க.வுக்கு உண்டு. அ.தி.மு.க.வுக்கு நிரந்தர பொது செயலாளரை தெய்வம் தான் தந்துள்ளது. ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரன் ஆகியோர் ஜாதி அரசியல் செய்கிறார்கள். ஜாதி அரசியல் செய்யும் டிடிவி தினகரனு்ககு எம்எல்ஏ தேர்தலில் கோவில்பட்டி தொகுதி மக்கள் நல்ல பாடம் புகட்டி அனுப்பினர். ஓபிஎஸ்சும், டிடிவியும் சேர்ந்து எம்பி தேர்தலை சந்திக்க போகின்றார்களாம். உள்ளுரில் விலை போகாத மாடு, தஞ்சாவூரில் நீங்கள் நின்று பாருங்கள். உங்கள் ஜாதிக்காரன் உங்களுக்கு ஓட்டு போடுவார்களா என்று பார்ப்போம். தென் மாவட்ட மக்கள் இழிச்சவாயங்கனு என 2 பேரும் நினைக்கின்றார்களா. திண்டுக்கல்லில் டிடிவி வேட்பாளர் டெபாசிட் இழந்தார். அதிமுகவிற்கு நிரந்தர பொதுச்செயலாளர் கிடைத்து விட்டார். இரட்டை இலை சின்னம் நமக்கு கிடைத்து விட்டது. மகாத்மா காந்தி பேரன் போன்று ஸ்டாலி்ன் பேசுகின்றார். லஞ்சமே அவர்கள் பார்த்ததே இல்லாது போன்று லஞ்சமே வாங்காதது போல பேசுகின்றனர். ஊழலுக்காக இந்த நாட்டை விட்டு விரட்டப்பட்டது என்று சொன்னால் அது திமுகதான். சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்து படிப்படியாக வளா்ந்து இந்த இயக்கத்தை காத்து வருகின்றார். மிகப்பெரிய கடவுன் சக்தி இல்லை என்று சொன்னால் 2 கோடி உறுப்பினர்கள் கொண்ட இந்த கட்சிக்கு தலைவராக வர முடியுமா. 3முறை முதலமைச்சராக உருவாக்கிய பன்னீர்செல்வம் இந்த இயக்கத்திற்கு துரோகி ஆகி விட்டார்.தினகரன் குடும்பம் கட்சியை கொள்ளையடித்தால் அம்மாவிற்கு கெட்ட பெயர் ஏற்பட்டு ஜெயிலுக்கு செல்ல வேண்டியிருந்தது, 4வருடம் எடப்படியார் ஆட்சியில் திமுகவினர்களை பாவம் பாாத்து விட்டுவிட்டோம். இந்த எதிர்கட்சிகள் என்ன செய்கின்றனர் என்று தெரியவில்லை. கோடிக்கணக்கில் பணத்தை வாங்கி கொண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் அமைதியாக உள்ளனர். பால் விலை மின் கட்டணம் உயர்வு கண்டு கொள்ளாமல் உள்ளனர். எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக உருவாக்க கூடிய இந்த மாநாட்டில் கழக நிர்வாகிகள் குடும்பத்தோடு கலந்து கொள்ள வேண்டும் என்று பேசினார்.

எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக அரியணையில் அமர்த்தும் வரை ஓய மாட்டோம் முன்னாள் அமைச்சர் நத்தம் இரா.விசுவநாதன் சூளுரை,

கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் நத்தம் இரா.விசுவநாதன் பேசும்போது, கடந்த ஆண்டு விருதுநகரில் மிகப்பெரிய மாநாட்டை மாநில மாநாடு போன்று முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கூட்டி காண்பித்தார். எடப்பாடியார் பின்னால்தான் விருதுநகர் மாவட்டம் இருக்கின்றது என்பதை நிருபித்து காண்பித்து இருக்கின்றார். நீங்களும் முழுமையாக ஆதரவு தந்துள்ளீர்கள். அதே போன்று மதுரையில் மாநாடிற்கும் நீங்கள் திரளாக வர வேண்டும். இங்கே தலைமை கழக நிர்வாகிகள் வந்து இருக்கின்றோம் என்று சொன்னால் நீங்கள் மாநாட்டிற்கு குடும்பம் குடும்பம்மாக வர வேண்டும். வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி அதிமுக மபெறும் வெற்றியை பெற் வேண்டும். அடுத்து நடைபெறும் சட்ட மன்ற தேர்தலிலும் அதிமுக மாபெறும் வெற்றியை பெறும் வகையில் இந்த மாநாடு அமையும். எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக அரியணையில் அமர்த்தும் வரை ஓய மாட்டோம். மதுரை மாநாட்டிற்கு பிறகு தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என்று பேசினார்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை தமிழ் மண்ணிலே இருந்து எவராலும் வீழ்த்த முடியாது முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேச்சு,

கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் பேசும்போது, விருதுநகர் மாவட்டம் என்று சொன்னாலே விருந்துக்கும் விருதுக்கும் பெயர் போன மாவட்டம். நீங்கள் நினைத்தால் தான் அடுப்பே எரியும் தீப்பெட்டிக்கு சொந்தமானவர்கள் என்பதை நாங்கள் அறிவோம். இந்த மாவட்டத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை வழிநடத்தி சென்று கொண்டிருக்கிற முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் பால்முகம் கொண்ட உங்களுடைய ராஜேந்திரபாலாஜி அவர்களை நான் வாழ்த்துகிறேன். எனக்கு பின்னாடி கழகத்தின் முன்னோடி தலைவர்கள் இங்கே பேசி இருக்கிறார்கள். மேடையிலே அமர்ந்து கொண்டிருக்கிற ஒவ்வொருவருக்கும் வரலாறு இருக்கிறது என்பதை நான் அறிவேன். இங்கே வருகை தந்திருக்கிற ஆற்றல் மிக்க கழகத்தின் அனைத்து பொறுப்பாளர்களை அன்பிற்கினிய பெரியோர்களே தாய்மார்களே நண்பர்களே உங்கள் அத்தனை பேருக்கும் எனது பணிவான வணக்கத்தை முதலில் நான் தெரிவித்துக் கொள்கிறேன. ஒன்று எங்கள் ஜாதியே ஒன்று எங்கள் நீதியே உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே என்று சொன்னவர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவர் எம்ஜிஆர் இந்திய நாட்டின் வரலாற்றில் தமிழகத்தின் வரலாற்றில் எந்த தலைவருக்குமே இல்லாத ஒரு வரலாற்றை படைத்தார். புரட்சி தலைவர் அவர்கள் வாழ்ந்தாலும் மறைந்தாலும் இந்திய நாட்டின் வரலாற்றில் தமிழகத்தின் வரலாற்றில் உலகத்தின் வரலாற்றில் இடம்பெற்றிருக்கிற தலைவராக இருந்தார்கள் என்பதை நாம் அறிவோம். என்றும் நம்முடைய இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிற ஒரே தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் தான. அம்மா என்று அழைப்பு நாம் உலகத்திலே வாழுகிற அத்தனை பேரும் அம்மா என்று அழைக்கக்கூடிய ஒரே தலைப்பில் புரட்சித்தலைவி அம்மா என்பதை இந்த நேரத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். காலத்தின் அருமை கருதி இங்கே வந்திருக்கிற கழகத்தினுடைய தோழர்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன். காற்றை தடுக்க முடியாது கடலுக்கு அணை போட்டு தடுக்க முடியாது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை தமிழ் மண்ணிலே இருந்து எவராலும் வீழ்த்த முடியாது என்ற வரலாற்றை படைக்கிற கூட்டமாக இந்த கூட்டம் இங்கே அமைந்திருக்கிறது. மதுரை மண்ணிலே வருகின்ற 20ம் தேதி நடைபெறுகின்ற நிகழ்ச்சி என்பது தமிழகத்தின் ஒரு வரலாற்று படைக்கிற நிகழ்ச்சியாக அமையப்போகின்றது. 26 இல் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடைய ஆற்றல்மிக்க சக்தியாக இருக்கிற கழகத்தின் பொதுச்செயலாளர் எடப்பாடியார் நாளைய தமிழகத்திலே முதலமைச்சராக வருவார். கழக மாநாட்டிற்கு கழக நிர்வாகிகள் குடும்பத்தோடு கலந்து கொள்ள வேண்டும் என்று பேசினார்.

எதற்கும் அஞ்சாத கூட்டம் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
முன்னாள் அமைச்சர் தங்கமணி பேச்சு

கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசும்போது, சாதாரண தொண்டனும் இந்த இயக்கத்திற்கு கழகப் பொதுச் செயலாளராக வரலாம் என்ற வரலாற்றை இன்றைய தினம் நிருபித்து நான்கு ஆண்டு காலம் தமிழகத்தில் சிறப்பான ஆட்சியை கொடுத்து தமிழக சட்டமன்றத்தினுடைய எதிர்க்கட்சி தலைவராக இருந்து வருங்கால முதலமைச்சராக வர இருக்கின்ற கழகத்தினுடைய பொதுச் செயலாளர் மரியாதைக்குரிய அண்ணன் எடப்பாடியார் அவருடைய ஆணைக்கிணங்க இந்த இந்தக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. விருதுநகர் மாவட்ட செயல் வீரர்கள் வீராங்கனைகள் கூட்டத்திற்கு சிறப்பாக ஏற்பாடு செய்து வரவேற்புரை ஆற்றி அமர்ந்திருக்கின்ற விருதுநகர் மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர் எங்களது ஆருயிர் நண்பர் மரியாதைக்குரிய கே.டி.ஆர் அவர்களே கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் மரியாதைக்குரிய அண்ணன் ரவிச்சந்திரன் அவர்களை இங்கே எனக்கு முன்னாள் பேசிய தலைமை கழக நிர்வாகிகள் எனக்கு பின்னால் பேச இருக்கின்ற தலைமை கழக நிர்வாகிகள் இந்த மாவட்டத்தினுடைய மாவட்ட கழக நிர்வாகிகள் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் இன்னால் சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ் உள்ளிட்ட கழகத்துடைய பொறுப்பாளர்கள் ஒன்றிய நகர பேரூர் கழகச் செயலாளர்கள் கூட்டுறவு சங்கத்தினுடைய பொறுப்பாளர்கள் உள்ளாட்சி மன்றத்தினுடைய பிரதிநிதிகள் அதற்கும் மேலாக மாண்புமிகு அம்மாவுடைய போர்படை தளபதிகளாக விள்ங்கி கொண்டிருக்கின்ற பொறுப்பாளர்கள் அனைவருக்கும் முதற்கண் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றேன். இந்த மாநாட்டின் ஆலோசனைக்கூட்டம் நேற்றைய தினம் ராமநாதபுரத்தில் ஆரம்பித்து சிவகங்கை முடித்து இன்றைய தினம் விருதுநகரில் ஆரம்பித்து தூத்துக்குடியில் முடிக்க இருக்கின்றோம். இராமநாதபுரத்துக்கு செல்லுகின்ற போது நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை அங்கேயே ஒரு மாநாடு போல இருந்தது அதை முடித்துவிட்டு சிவகங்கை வருகின்றபோது அதை மிஞ்சுகின்ற வகையில் இருந்தது இன்றைய தினம் சிவகாசி வருகின்றபோது அதை இரண்டையும் மிஞ்சி விருதுநகர் மாவட்டம் சிறப்பாக இருக்கிறது என்ற அளவிற்கு நீங்கள் வந்திருக்கின்றீர்கள். இந்த படை வீர வரலாற்றின் பொன்விழாவின் எழுச்சி மாநாட்டிலே நிச்சயமாக முதன்மை மாவட்டமாக இருக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டாக தான் நீங்கள் சிறப்பாக வருகை தந்து இருக்கின்றீர்கள். நமது வெற்றி மாநாடு என்பது நடக்க இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலில் 40 நாடாளுமன்றத்திலும் நாம் வெற்றி பெறுவோம் என்பதற்கு முன்னுரங்கமாக நடைபெறுகின்ற மாநாடு. இன்றைய தினம் இரண்டு ஆண்டு காலத்தில் இந்தியாவிலேயே இப்படி ஒரு ஆட்சி மக்கள் வெறுக்கின்ற ஆட்சி எந்த மாநிலத்திலும் இருந்திருக்காது. இரண்டு ஆண்டு காலத்திலேயே எப்பொழுது திமுக போகும் எப்பொழுது எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சர் ஆக வருவார் என்று தமிழக மக்கள் மூளை முடுக்கெல்லாம் பேசுகின்ற அளவிற்கு திமுக கெட்ட பெயர் மக்களிடத்திலே வாங்கிக் கொண்டிருக்கின்றது. அதற்கு காரணம் அண்ணன் எடப்பாடியார் அவர்கள் நான்கு ஆண்டு காலம் ஒரு சிறப்பான ஆட்சியை கொடுத்தார்கள். அதை பொறுத்துக் கொள்ள முடியாமல் தான் எப்படியாவது வழக்கை தொடுக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு வகையிலே முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கை தொடுத்து கொண்டு இருக்கின்றார். நான் கூட இங்கே வருவதற்கு முன்பாக இங்கே சிங்கக்குரலாக சிம்ம குரலாக ஒழிக்கின்ற குரல் குறைந்து போச்சே என்று நினைக்கும் போது அதற்கு ஒரு சிங்கம் இங்கே வந்துவிட்டது. சி.வி.சண்முகம் என்பது எனக்கு நன்றாக தெரியும். எதற்கும் அஞ்சாத கூட்டம் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்பதை இந்த கூட்டத்தின் வாயிலாக நான் சொல்லியாக வேண்டும். வெள்ளி விழா மாநாடு திருநெல்வேலியில் நடைபெற்றது அதற்கு பின்னால் நடைபெறுகின்ற இந்த மாநாடு அண்ணா திமுக முன்னேற்றக் கழகத்திற்கு இனிமேல் வீழ்ச்சியே இல்லை என்கிற அளவில் இருக்கும். கட்சி நிர்வாகிகள் ஏதோ நம் உழைப்பதெல்லாம் மேலே தெரியாமல் போய்விடும் நாம் யாரை கூட்டி வருகிறோம் என்று தெரியாமல் போய்விடும் என்று யாரும் தயவு செய்து நினைத்து விடாதீர்கள். யார் உழைத்தாலும் இந்த இயக்கத்திலே மேலே வரலாம் என்பதற்கு இங்கிருக்கின்ற அத்தனை பேருமே உதாரணம். இந்த மாநாட்டை பொருத்தவரை விருதுநகர் அருகே அருகாமையில் இருக்கின்ற மாவட்டம். இந்த மாவட்டத்திற்கு நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. ஆக ஏற்கனவே இரண்டு மாவட்ட கழகச் செயலாளரும் நாங்கள் எத்தனை வண்டியை எடுத்து இருக்கின்றோம் என்று சொல்லி இருக்கின்றார்கள். அதற்கு மேலும் எடுப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம் என்று சொல்லி இருக்கின்றார்கள். கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் அவர்கள் எங்களை அழைத்து இந்த கூட்டத்தை நடத்த வேண்டும் என்று சொல்வதற்கு முன்பாகவே நீங்கள் தயாராக இருக்கிறீர்கள் என்று சொன்னால் வருங்காலத்திலே விருதுநகர் மாவட்டம் ஏழு சட்டமன்ற தொகுதியிலும் அண்ணா திமுக முன்னேற்ற கழகம் வெற்றி பெறும் என்ற வீர வரலாற்று மாநாடு என்ற வகையில் மதுரை மாநாடு அமையும். அதற்கு முன்கூட்டியாக நடைபெறுகின்ற நாடாளுமன்ற தேர்தலிலே 40 நாடாளுமன்றத்திலும் விருதுநகர் நாடாளுமன்றம்தான் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பெருமையும் உங்கள் வாயிலாக கிடைக்கப்போகிறது என்று சொல்லி மாநாட்டிற்கு திரளாக மக்களை நீங்கள் அழைத்து வர வேண்டும் என்று பேசினார்.

கோடி கோடியாக கொள்ளை அடிக்கும் திமுக அமைச்சர்கள்
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு

கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எ.ஸ்பி. வேலுமணி பேசியதாவது,
வேலூர் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் யார் நன்றாக பேசுவார்கள் என்று எண்ணிய போது கே.டி.ராஜேந்திரபாலாஜி நன்றாக பேசுவார் என்று, சொல்லி அவர் பேசினார். நான் எத்தனையோ பேச்சைக் கேட்டு இருக்கிறேன்.அந்தக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலினை பற்றி அவ்வளவு கடுமையாக பேசினார். உண்மையை பேசினார். மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவரா இருக்கும்போது என்னென்ன பண்ணாரு தெரியும். எடப்பாடியார் அற்புதமா ஆட்சி செஞ்சார். பத்திரிகைகளை அடிமையா வச்சு எடப்பாடியாருக்கு எதிராக இருபதாயிரம் போராட்டங்களை நடத்தி ,ஆட்சியை என்னென்னமோ செஞ்சு அதிமுக ஆட்சியை கலைக்கணும்னு ஸ்டாலின் நினைச்சாரு. அத்தனையும் எதிர்கொண்டு தமிழகத்தில் ஒரு சிறப்பான ஆட்சியை எடப்படியார் கொடுத்தார். கோயமுத்தூரில் என்னுடைய தொகுதியில், கே.டி.ராஜேந்திரபாலாஜி, ஸ்டாலினை பற்றி கடுமையாக பேசினார். அதற்காகதான் அவர் மீது பொய் வழக்கு போடப்பட்டது. அவரப் பிடிக்க எத்தனையோ தனிப்படை அமைச்சாங்க . அவர் பேசுனது என்ன ஸ்டாலின் போய் குற்றாலத்தில குளிச்சிட்டு வந்தா அவரு முடியோட வர்றாரா எப்படி வராரு பார்ப்போம் என்றுதான் பேசினார். ஸ்டாலின் உண்மையான நிலையை அவர் இயல்பான வாழ்க்கையை பற்றி தான் பேசினார். கே.டி.ராஜேந்திரபாலாஜி கட்சிக்காக துணிச்சலாக பேசி பொய் வழக்குகளை பெற்றுள்ளார். அது ஒன்னுமே இல்லாத வழக்கு. திமுக அமைச்சர்கள் இன்னைக்கு பார்த்த கோடி கோடியா கொள்ளை அடிக்கிறாங்க. மதுரையில் நடைபெறும் மாநாட்டில் கழக நிர்வாகிகள் குடும்பத்தோடு கலந்து கொள்ள வேண்டும் என்று பேசினார்.

அதிமுக மாநாட்டிற்கு பிறகு வரலாற்று சிறப்பு மிக்க மாற்றங்கள் ஏற்படும்- முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேச்சு

கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் பேசும்போது, “கட்சி அமைப்பிலே, கட்டமைப்பிலே, நிர்வாகத்திலே தனக்கு தான் பெரும்பான்மையான ஆதரவு உள்ளதாக கூறிய ஓபிஎஸ், அதிமுக நிர்வாகிகள் இபிஎஸ்-ஐ மட்டுமே ஏற்றுக் கொள்வதாக கூறியதை ஏற்றுக்கொள்ளமுடியாமல் தவிக்கிறார். உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம், தேர்தல் ஆணையம் ஆகியவைகள் பொதுச்செயலாளர் எடப்பாடிதான். எடப்பாடி அணிதான் அதிமுக எனக் கூறியுள்ளது.அதனையும் ஏற்றுக் கொள்ளாத ஓபிஎஸ், தற்போது தொண்டர்கள் ஆதரவு எனக்கு மட்டும்தான் உள்ளது என்கிறார். இவர் இப்படி பேசுவது வடிவேலு காமெடி பாணியில் இயக்குனர் சுந்தர். சியிடம் தெருவுக்கு வா பார்த்துக் கொள்வோம், வீட்டுக்கு வா பார்த்துக் கொள்வோம் என்பது போல் உள்ளது. எதிரிகளுக்கு நம்மைப் பற்றி தெரியும். ஆனால் அதிமுகவை அழித்து விடலாம் என்ற பச்சோந்திகளுக்கும், துரோகிகளுக்கும் எதிரானது இந்த மாநாடு என்பதை நாம் எடுத்துச் சொல்ல வேண்டும். அதிமுக நடத்தியுள்ள ஒவ்வொரு மாநாட்டிற்கு பிறகும் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க மாற்றங்கள் ஏற்படும். அதிமுக என்ற மாபெரும் இயக்கம் தொண்டர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம்” என்றார்.

தக்காளி, வெங்காயம், மின்கட்டண ரசீதோடு சென்று பெண்களை மாநாட்டிற்கு அழையுங்கள் முன்னாள் அமைச்சர் வளர்மதி பேச்சு.

கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் வளர்மதி பேசும்போது,
புரட்சித்தலைவி அம்மா அவர்களை வணங்கி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் கழகப் பொதுச் செயலாளர் அண்ணன் எடப்பாடியார் அவர்களின் ஆசியோடு நடைபெற்றுக் கொண்டிருக்கிற செயல் வீரர்கள் வீராங்கனைகளின் ஆலோசனை கூட்டத்திற்கு தலைமை பொறுப்பேற்று இருக்கின்ற தலைவர் மாவட்டக் கழகச் செயலாளர் என்னுடைய அன்பிற்கும் பாசத்திற்கும் உரிய சகோதரர் ராஜேந்திரபாலாஜி அவர்களே நல்ல ஆலோசனைகளை வழங்குவதற்காக வருகை தந்திருக்கிற அண்ணன் எடப்பாடியார் அவர்களால் அனுப்பப்பட்டு இருக்கிற தலைமைக் கழகத்தினுடைய மூத்த நிர்வாகிகளே மாவட்ட செயலாளர் அவர்களே வருகை தந்திருக்கிற பகுதி ஒன்றிய நகர கிளைக் கழக அனைத்து செயலாளர்களே பிற அணிகளின் மாவட்ட கழக செயலாளரகளே எதிரிக்கு காட்டுவதற்காக நடத்தப்படுகிற மாநாடு. எதிரி என்று சொன்னால் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களும் புரட்சித்தலைவி அம்மா அவர்களும் நமக்கு சொல்லிக் கொடுத்திருப்பது தீய சக்தி கருணாநிதி, தீய சக்தி திமுக என்று அந்த திமுகவை வீழ்த்துவதற்கு நடத்தப்படுகிற மாநாடு. அந்த மாநாடு எடப்பாடியாரை மீண்டும் கோட்டைக்கு அமர்த்த இருக்கிற மாநாடு. இங்கே சகோதரிகள் எல்லாம் வந்திருக்கிறார்கள். பெண்களை அழைக்க வேண்டும் என்று சொன்னால் நீங்கள் ரொம்ப சிரமப்பட வேண்டாம். தக்காளியை கையில் வைத்துக்கொள்ளுங்கள். ஒரு வெங்காயத்தை எடுத்துக்கோங்க, கரண்ட் பில் எடுத்துக்கொண்டு போய் காட்டுங்கள். அண்ணன் எடப்பாடியார் இருக்கும்போது கரண்ட் பில் எப்படி இருந்தது. இப்போது எப்படி உள்ளது என்று கூறுங்கள். சொத்து வரி ரசீதை வைத்துக்கொள்ளுங்கள் எல்லாத்தையும் எடுத்து வரிசையா பின் பண்ணி எடுத்துட்டு போயி கண்டிப்பா கொண்டு போய் காண்பித்து மாநாட்டிற்கு கூப்பிடுங்க. எடப்பாடியார் வந்தார் 2500 ரூபாய் டோக்கனோட தான் கொடுத்தார். நீங்க எல்லாம் அவசியம் மாநாட்டுக்கு வாங்க. தமிழ்நாட்டில் இருக்கிற தாய்மார்கள் மிகவும் சிரமப்பட்டு கொண்டிருக்கிறார்கள். பெண்கள் எடப்பாடியார் ஆட்சி எப்போது வரும் என்று எதிர்பார்த்து இருக்கிறார்கள். எடப்பாடியார் அவர்களை மீண்டும் முதலமைச்சாராக ஆக்குவதற்கு நீங்கள் எல்லாம் அனைவரும் ஒன்று கூடி திரண்டு முயற்சி எடுத்து மாநாட்டுக்கு வாருங்கள். அண்ணன் எடப்பாடியாரின் வீர உரையை வெற்றி உரையை கேளுங்கள் என்று பேசினார்.

மக்களாட்சியை கொடுத்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர் எடப்பாடியார்
முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேச்சு

முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசும்போது, எழுச்சி உணர்ச்சியும் மிகுந்த ஒரு அற்புதமான ஒரு செயல் வீரர்கள் நிர்வாகிகள் கூட்டத்தை தென்பாண்டி மண்டலத்துடைய ஜப்பானாக திகழக்கூடிய சிவகாசியிலே என் அருமை தம்பி கழக அமைப்புச் செயலாளர் மாவட்டத்தினுடைய செல்லப்பிள்ளை கட்டி வா என்றால் வெட்டிவரும் காளையர்களை தன்னகத்தை கொண்டு தம்பி கேடிஆர் உடைய அற்புதமான இந்த நிகழ்ச்சியில் அவருக்கு தோளோடு தோல் நின்று இந்த சிறப்பாக பணியாற்றிக் கொண்டிருக்கின்ற அன்புத்தம்பி ரவிச்சந்திரன் உடைய அன்பான அழைப்பினை ஏற்று இங்கே வருகை தந்து சிறப்பித்து இருக்கின்ற கழக நிர்வாகிகளே புரட்சித்தலைவி புரட்சித்தலைவர் எம்ஜிஆர் உடைய ரத்தத்தின் ரத்தமான உடன் பிறப்புகளே புரட்சித்தலைவர் உருவாக்கிய இந்த மாபெரும் இயக்கம் பட்டு போகாமல் தன்னுடைய சேவையை தொடர்கின்ற வகையில் இந்த இயக்கத்தை முன்னெடுத்துச் செல்கின்ற அண்ணன் கழகப் பொதுச் செயலாளர் ஏழைகளின் நம்பிக்கை நட்சத்திரம் மாணவர் சமுதாயம் முதல் அதிகாரிகள் வரை இவர் போல் வாழ வேண்டும் என்று இவர்கள் ஆட்சி செய்ய வேண்டும் என்று எல்லோரும் எண்ணுகிற அளவுக்கு சிறப்பான ஆட்சியை கொடுத்து இன்றைக்கு மக்களுடைய எதிர்பார்ப்பாக உள்ள எடப்பாடியார் ஆலோசனையின்படி இந்த ஆலோசனைக்கூட்டம் நடைபெறுகின்றது. இன்றைக்கு பொம்மை முதலமைச்சர் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தலைவர் ஸ்டாலின் உடைய ஆட்சி எப்பம் போகும் என்றைக்கு நம்முடைய அன்புக்கும் இந்த மரியாதைக்குரிய எடப்பாடியார் ஆட்சி அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமையும் என்று மக்களினுடைய எதிர்பார்ப்பு கூரிய அண்ணன் எடப்பாடியார் ஆணைக்கிணங்க கழக வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு மதுரையில் நடைபெறுகிறது. அந்த நடைபெறுகிற மாநாட்டிற்கு தென்பாண்டி மண்டலத்தில் இருக்கிற மாவட்டங்கள் தோறும் கழக நிர்வாகிகளை சந்தித்து எப்படி எல்லாம் நீங்கள் வர இருக்கிறீர்கள் அந்த மாநாட்டிலே எப்படி கலந்து கொள்ள இருக்கிறோம் என்பதை அறிந்து வாருங்கள் என்று தன்னுடைய தலைமைக் கழக நிர்வாகிகளை அனுப்பி இருக்கிறார். நேற்றைய தினம் நம்முடைய சகோதரர்கள் பேசியதை போல முகவை மாவட்டத்தினுடைய தெய்வீகமும் தேசியமும் இரு கண்களாக கொண்ட ராமநாதபுரம் மாவட்டத்தினை தொடங்கி வீரமும் விவேகமும் நிறைந்த சிவகங்கை மாவட்டத்தில் இரண்டாவது கூட்டத்தை நடத்தி இன்றைக்கு முகமை மாவட்டத்தின் அங்கமாக இருக்கின்ற விருதுநகர் மாவட்டத்தில் மையம் கொண்டிருக்கின்ற இந்த செயல் வீர கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கின்ற தலைமைக் கழக நிர்வாகிகளே, இங்கே வருகை தந்த சிறப்பித்து இருக்கின்ற மேனாள் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களே கழகத்தின் பல்வேறு பொறுப்புகளை தாங்கி இருக்கிற கழக நிர்வாகிகளே ஒப்பற்ற என் அன்பு உடன்பிறப்புகளே சகோதர சகோதரிகளே உங்கள் அனைவருக்கும் வணக்கம். இந்த நேரத்திலே ஒன்றை சுட்டிக்காட்ட ஆசைப்படுகின்றேன். பொன்மன தலைவன் புரட்சித்தலைவர் தொட்டது தொடங்கி இருக்கிறது. அவர் 17 லட்சம் தொண்டர்களைக் கொண்ட இயக்கமாக இந்த இயக்கத்தை உருவாக்கினார். ஒன்றை கோடி தொண்டர்களைப் பெற்ற மாபெரும் இயக்கமாக உருவாக்கியவர் புரட்சித்தலைவர் அம்மா அவர்கள். இன்னைக்கு இரண்டு கோடி தொண்டர்களைப் பெற்ற மாபெரும் இயக்கமாக மாற்றி காட்டியவர் நம்முடைய அண்ணன் கழகப் பொதுச்செயலாளர் ஏழைகளின் நம்பிக்கை நட்சத்திரம் எடப்பாடியார். எனவே இந்த இயக்கம் பல்வேறு பரிமாணத்திற்கு வழியிலே இந்த இயக்கம் நடந்து கொண்டிருக்கிறது. சாதாரண இயக்கமல்ல இது.
புரட்சி தலைவிக்கு பிறகு இந்த இயக்கம் அவ்வளவுதான் இந்த ஆட்சி அவ்ளோதான் என்றார்கள் சிறப்பான ஆட்சி மக்களின் நம்பிக்கை பெற்ற ஆட்சியாக கொடுத்து மக்களுடைய மனதில் நிறைந்து படிக்காமலே பாஸ் பண்ணலாம் பாஸ் பண்ண வைக்க முடியும் என்பதை எடப்பாடியார் தான் செஞ்சார் அதே மாதிரி இந்த அண்ணா திராவிட முன்னேற்ற கழகம். வீர வரலாற்றை வெற்றி சரித்திரமாக 69 சதவிகித இட ஒதுக்கீட்டை பெற்று கொடுத்த இயக்கம். அதேபோன்று எடப்பாடியார் ஆட்சியில்தான் மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% கிடைத்தது. இந்த கட்சியிலேதான் ஜாதி கிடையாது மதன் கிடையாது ஏழை பணக்காரன் என்ற வித்தியாசம் இந்த கட்சியிலே கிடையாது. சாதாரண மணிதன் கூட தன் உழைப்பால் இந்த இயக்கத்திலே பெரிய பதவிக்கு வர முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டு தான் இந்த இயக்கத்திலே பல்வேறு தலைவர்கள் இன்றைக்கு உருவாகி இருக்கிறார்கள். நம்முடைய பொன் விழா மாநாடு நெல்லை சீமையிலே நடந்த பொழுது எவ்வளவு பெரிய எழுச்சி ஏற்பட்டதோ தொண்டர்கள் எழுச்சி ஏற்பட்டதோ அதை காட்டிலும் பன்மடங்கு இந்த பொன்விழா மாநாடு மிகச் சிறப்பான மாநாடாக அமைய வேண்டும். சொந்தங்கள் அனைவரும் நம் ஒன்றாக இணை இருக்கிறோம். குடும்பமாக கலந்து கொள்ள இருக்கிறோம். எனவே வாருங்கள் மதுரை வரவேற்க நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம் என்று பேசினார்.

எடப்பாடியார் மாநாடு எழுச்சி உரையை எதிர்பார்த்து காத்திருக்கும் இந்திய தேசம்
அமைச்சர் ஆர்.பி.உதயகுமார பேச்சு

கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார பேசும்போது, சிறப்போடும் எழுச்சியோடும் ஒரு புதிய வெற்றி சரித்திரத்தை புதிய அத்தியாயத்தை தொடங்கி வைக்கின்ற வகையிலே வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டை நம்முடைய கழகத்தினுடைய நிரந்தர பொதுச் செயலாளர் சாமானிய முதல்வராக சரித்திரம் படைத்திட்ட எளிய முதல்வராக இலக்கணம் படைத்திட்ட நம்முடைய பாசமிகு அண்ணன் எடப்பாடியார் அவர்களுடைய கரத்தை வலுப்படுத்துகின்ற வகையிலும் அவருடைய மேலான ஆணைக்கிணங்க நம்முடைய மாநாடு நடைபெற வேண்டும். அதற்குரிய ஆலோசனைகளை குறிப்பாக தென் தமிழகத்தில் இருக்கிற தென்பாண்டி மண்டலத்தில் இருக்கிற கழக தொண்டர்களுக்கு உற்சாகத்தையும் வழிகாட்டுதலையும் வளர்கின்ற வகையிலே ஆலோசனை கூட்டத்தை நடத்துங்கள் என்று மாவட்ட கழகத்துடைய செயலாளர்களுக்கு ஆணை பிறப்பித்தார்கள். நேற்று ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டத்தில் நடத்தியதற்கு பிறகு அண்ணன் அவர்களிடத்திலே கருத்துக்களை சொன்னோம். அண்ணா நீங்கள் மாநில மாநாட்டை மதுரையில் நடத்துவதற்கு ஆணையிட்டு அதற்கான ஆலோசனை கூட்டங்களை நடத்துவதற்கு உத்தரவு பிறப்பித்தீர்கள். நேற்று இராமநாதபுரத்தில் மாவட்ட மாநாடு சிவகங்கை மாவட்டம் மாநாடு இப்போது விருதுநகரில் பார்த்தால் இங்கே ஒரு மாநில மாநாட்டையே நடத்திக் காட்டி இருக்கின்றார்கள். என்ன எங்களுக்கு ஒரு கவலையோடு அதை பார்க்கிறோம்னா 100 ஏக்கர்ல இடம் பிடிக்கிறதுக்கு எடப்பாடியார், தலைமை கழகத்தினுடைய நிர்வாகிகளுக்கு உத்தரவு பிறப்பித்தாங்க. 100 ஏக்கர்ல அங்க விரிவான ஏற்பாடெல்லாம் செஞ்சி வைத்திருந்தோம். வாகனங்கள் பார்க்கிங் செய்ய 200 ஏக்கர் செஞ்சு வச்சிருந்தோம். இப்ப ரெண்டு நாள் வந்த தகவலை பார்த்து நமது பொதுச்செயலாளர் எடப்பாடியார், 100 ஏக்கர் பத்தாது 1000 ஏக்கர் வேணும்னு கூறினார். விருதுநகர் பார்த்ததற்கு பிறகு வாகனத்தை நிறுத்துவதற்கு பிறகு இப்பொழுது உத்தரவு எங்களுக்கு வந்திருக்கிறது. எப்பவுமே கே.டி.ராஜேந்திரபாலாஜி எதையுமே சிறப்பாக செய்வார். அவர் மனசு வச்சா அது நடக்கும். இப்ப மனசு வச்சிருக்காரே. அது சிறப்பாக தெரியுது. அவருக்கு துணையாக ரவிச்சந்திரன் அவர்களும் உள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் ஏழு தொகுதியும் எனக்கு நன்றாக தெரியும். பொறுப்பாளராக இருந்திருக்கிறேன். முதல் முதல்ல சட்டசபைக்கு நுழைவதற்கு எனக்கு வாய்ப்பளித்த மாவட்டம். அம்மா சொன்னாங்க நீ சாத்தூருக்கு போங்க, நீங்கதான் பொறுப்பாளர் என்று கூறினார். இருக்கன்குடி மாரியாத்தா தெரியும், உங்களை தெரியும் என்று நான் அம்மாவிடம் கூறினேன். பிறகு ஏன் நிக்கிறதுக்கு பயப்படுறியான்னு கேட்டாங்க. இல்லம்மா பயப்படலாமா மறுபடியும் ஏழு தடவை கேட்டாங்க, மறுபடியும் ஏழு தடவை அதே பதில் சொன்னேன். எப்படி ஜெயிப்பீங்கனு கேட்டாங்க அம்மான்னு பேர சொன்னா, நான் ஜெயிச்சிருவேன் என்று சொன்னேன். அதுதான் அங்க நடந்துச்சு. புரட்சித்தலைவர் சோதனையான காலகட்டத்தில் தேர்வு செய்த மாவட்டம் இந்த விருதுநகர் மாவட்டம். எங்க அண்ணன் கருப்பசாமிபாண்டியன் நம் குடும்பத்தின் மூத்தவர் வரலாற்றை அனைத்தும் சொல்லிட்டாரு. எப்பவுமே அவர் டேக் அப் நல்லா இருக்கும். லேண்டிங் கொஞ்சம் லேட் ஆகும். எல்லா தலைவர்களும் சொன்ன கருத்துக்களை அண்ணன் சொன்ன வரலாறு எல்லாம் நீங்க வச்சு இப்ப இந்த மாநாடு உடைய அவசியம் என்ன அப்படின்னு எல்லா இடத்திலும் பேசுறாங்க. எங்கங்க பேசுறாங்க, தமிழ்நாட்டுல பேசுறாங்க. பக்கத்து மாநிலத்தில் பேசுறாங்க, இந்தியா முழுவதும் பேசுறாங்க, ராமநாதபுரத்தில் உள்துறை அமைச்சர் பங்கேற்ற மாநாட்டில் பங்கேற்கும் வாய்ப்பை நம்முடைய கழகத்தின் நிரந்தர பொதுச் செயலாளர் எடப்பாடியார் அவர்கள் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் பங்கேற்க வாய்ப்பு கொடுத்தாங்க. மாநாட்டில் நான் அணிந்து இருந்த நமது மாநாடு லோகோவை பற்றி அமித்ஷாஜி கேட்டார். கியாஜி என்று கேட்டார். மதுரை மாநாடு என்று சொன்னேன். மதுரையி்ல் நடக்கும் மாநாடு எல்லோராலும் பேசப்படுகின்ற மாநாடு. அப்பம் அதுக்கு நம்ம உயிர் கொடுக்கணும். அதுக்கு வடிவம் கொடுக்கணும். அதுதான் நம்முடைய முக்கியமானது அதுக்கு இப்போ நம்ம எல்லாரும் ஒன்று கூடி இருக்கிறோம். எல்லோரும் நம்ம வந்து கலந்துரையாடுறோம். இந்த மாநாடு என்ன செய்தி இந்த உலகத்துக்கு சொல்லப்போகுது. தமிழ்நாட்டுக்கு என்ன சொல்லப்போகுது என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அண்ணன் எடப்பாடியார் கழகத்தின் நிரந்தர பொது செயலாளர் இன்றைக்கு காலத்தின் கொடையாக காலம் கண்டெடுத்த கப்பல் விருச்சமாக இனி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை எந்த கொம்பனாலும் தொட்டு பார்க்க முடியாது என்கிற நிலைக்கு இரண்டு கோடி தொண்டர்களை இமயத்தின் உச்சிக்கு உருவாககியுள்ளது. அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் செல்வாக்கு யாராலும் அளிக்க முடியாது. தொண்டர்கள் செல்வாக்கை யாராலும் அளிக்க முடியாது. மக்கள் செல்வாக்கை யாராலும் அளிக்க முடியாது. தலைவருடைய செல்வாக்கு அதுதான் காலத்துக்கு ஏத்த மாதிரி வருது. புரட்சித்தலைவர் யாரையும் அடையாளம் காட்டவில்லை. மதுரையில் நடைபெற்று மாநாட்டில் செங்கோலை புரட்சித்தலைவி அம்மா அவர்களிடம் புரட்சித்தலைவர் அவர்கள் ஒப்படைத்தார். மக்கள் அடையாளம் காட்டினார்கள், தொண்டர் அடையாளம் காட்டினார்கள், ஒரே தலைவி ஒப்பற்ற தலைவி புரட்சித் தலைவி அம்மா அவர்கள் இந்த இயக்கத்திற்கு தலைமை தாங்கினார். எனக்கு பின்னாலும் இந்த இயக்கம் 100ஆண்டுகள் ஆட்சியில் இருக்கும் என்று புரட்சித்தலைவி அம்மா அவர்கள் சொன்னாங்க. அம்மா அவர்களும் மறைஞ்சிட்டாங்க. யாரையும் அடையாளம் காட்டல. தொண்டர் படை இருக்கின்றது. அடையாளம் காண வேண்டும். இப்படி அடையாளம் கானும்போதுதான் ஆங்காங்கே சிறு பிரச்சனை நிலவும். கருத்து வேறுபாடு வரும் அப்படி கருத்து வேறுபாடு வருகிற போது சென்னையில் அங்க கொஞ்சம் பிரச்சனை அப்படியே நம்ம மத்திய மாவட்டம் சோழமண்டலம் பாண்டிய மண்டலம் கொங்கு மண்டலம் அப்படி வருகிற போது அதிகமாக கல்லடி சொல்லடிப்பட்டது நம்முடைய பாண்டிய மண்டலம்தான். விருதுநகரில் சொல்லவே வேண்டாம். தொண்டர்கள் ஆதரவோடு மக்கள் ஆதரவோடு அண்ணன் எடப்பாடியார் தலைமையை ஏற்றார். மக்கள் சொல்லிட்டாங்க எம்எல்ஏ சொல்லிட்டாங்க, உச்ச நீதிமன்றம் சொல்லிடுச்சு, உயர்நீதிமன்றம் சொல்லிடுச்சு, இந்திய தேர்தல் ஆணையம் சொல்லிடுச்சு எல்லாரும் சொல்லிட்டாங்க. ஆனாலும் நான் தூங்கிட்டே இருப்பேன். என்ன நடக்குது எனக்கே தெரியாது அண்ணா திமுகவிற்கு நான்தான் தலைவன் என்று ஒருவர் சொலலிக்கிட்டே இருக்கின்றார். இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடி நினைத்தார். இனிமேல் அண்ணா திமுகதான் எடப்பாடியார்தான், எடப்பாடியார்தான் அண்ணா திமுக என்று கூறிவிட்டார். எனக்கு மாலை போடுவது எடப்பாடியார், எனக்கு பக்கத்தில் உட்கார்ந்து இருப்பதும் எடப்பாடியார் என்று அவரும் கூறிவிட்டார். இனி யார் சொல்லனும். இனி நடக்கப் போகிற இந்த வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டிலே மக்கள் தொண்டர்கள் படை சொல்ல வேண்டும். இந்திய திருநாடு மட்டுமல்ல உலகத் தலைவர்களே இன்றைக்கு அண்ணன் எடப்பாடியார் அவர்கள் வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டிலே அங்கே என்ன பேசப் போகிறார் என்ன செய்தி சொல்லப் போகிறார் என காத்திருக்கி்ன்றது. இது தமிழ்நாட்டை மீட்டெடுப்பதற்காக தமிழ் மொழியை தமிழ் இனத்தை தமிழ்நாட்டு மக்களை தமிழ்நாட்டினுடைய வளர்ச்சியை ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக அண்ணன் எடப்பாடியார் அவர்கள் சொல்லுகிற அந்த செய்தி உலக நாடுகள் உலகத்தினுடைய பத்திரிகையாளர்கள் இந்திய தேசத்தில் இருக்கக்கூடியவர்கள் எல்லாம் இன்றைக்கு ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றார்கள். அகவே நமது மாநாடடிற்கு உயிர் வடிவம் கொடுப்பவர்கள் இங்கு தொண்டர்கள் தலைவர்கள் தொண்டர்கள் இங்கே இணைகிற போது ஒரு புதிய வரலாறு படைக்கப்படுகிறது. இன்றைக்கு நமக்கு கிடைத்திருக்கிற தலைவர், அவர் தொண்டராக பிறந்து கிளைக் கழக செயலாளர் தன்னை இணைத்துக்கொண்டு அரை நூற்றாண்டுகள் இந்த இயக்கத்திற்கு விசுவாசமாக ஏற்றுக்கொண்ட தலைமையை உயிருக்கும் மேலாக நேசித்து உழைத்த காரணத்தால்தான் இன்றைக்கு நம்முள் இருந்த ஒருவரை இனி அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய நிரந்தர பொதுசெயலாளர் அண்ணன் எடப்பாடியார் என்ற அந்த ஒற்றை முழக்கத்திற்கு உயிர் வடிவமாக அலை அலையாக நீங்கள் திரண்டு வர வேண்டும். இங்கே ஒரு மாநாடு கூட்டியிருப்பதாக அண்ணன் ராஜன்செல்லப்பா அவர்கள் சொன்னார்கள். அதே அண்ணன் கருப்பசாமிபாண்டியன் அவர்கள் சொன்னார்கள். இப்போது பொன்விழா மாநாட்டை நடத்துகிற வாய்ப்பு நமக்கு கிடைத்திருக்கிறது. இப்போது நடைபெறுகிற மைதானம் கருப்பசாமிகோவில் வளையங்களும் என்பது மதுரைக்கு மட்டும் சொந்தம் அல்ல. அது விருதுநகருக்கு சொந்தம் விருதுநகருக்கு அதுதான் எல்லை பகுதியாக உள்ளது. நாங்கள் வருகிறபோது முதன்முதலாக 2011ல் நானும் ராஜேந்திரபாலாஜி, இங்க இருக்கக்கூடிய பாண்டியராஜன் எல்லோரும் நிற்கிறபோது அந்த வளையங்களும் கருப்பசாமி வணங்கிவிட்டுதான் நாங்கள் அந்த அறிவிப்போடு உள்ளே நுழைந்தோம். இங்க இருக்கிற ராஜவர்மன் இங்க இருக்கக்கூடிய அனைவரும் வரவேற்றார்கள். அங்கு வெற்றி கிடைத்தது. ஆகவே மதுரையின் மையம் என்று சொன்னாலும் அது விருதுநகருக்கு நுழைவு வாயில் என்கின்ற அடிப்படையிலே விருதுநகருக்கு அது சொந்தம் என்கிற அடிப்படையிலே நீங்கள் அணி அணியாக மாநாட்டிற்கு வரவேண்டும் என்று பேசினார்.

சாதாரண தொண்டனும் சரித்திரத்தில் இடம்பிடிக்க முடியும் என்று சொன்னால் அந்த வீர வரலாறு அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் மட்டுமே முடியும்.
கழக அமைப்பு செயலாளர் கருப்பசாமிபாண்டியன் பேச்சு

கழக அமைப்பு செயலாளர் கருப்பசாமிபாண்டியன் பேசும்போது, தமிழ்நாட்டில் சுதந்திரத்திற்கு பிறகு எத்தனையோ தலைவர்கள் பொறுப்புக்கு வந்தாலும் பாரத ரத்னா விருதுக்குறிய பெருமையை தமிழ்நாட்டுக்கு பெற்றுத்தந்து தமிழ்நாட்டில் எட்டாவது வள்ளலாக ஏன் தமிழ்நாட்டில் இருக்கிற ஏழை எளிய மக்கள் எல்லாம் கண்ணால் காண்கிற ஒரு இறைவனாக அவருடைய உருவம் மறைகிறது தவிர நம்முடைய உள்ளங்களிலும் இல்லங்களிலும் நிறைந்து இருக்கிற நம்முடைய அன்பு தலைவர் தாய் தந்தையைப் போல நாம் பாசம் காட்டிக் கொண்டிருக்கிற புரட்சித்தலைவர் எம்ஜிஆர் உடைய ஆசீர்வாதத்தோடு அவர் விட்டுச் சென்ற இயக்கத்தை கட்டி காத்து இந்தியாவுக்கே ஈடு இணையற்ற ஒரு இரும்பு பெண்மணி ஆக கருணாநிதி குடும்பத்தை அரசியல் அநியாயங்களை எல்லாம் அழிக்க வந்த ஆதிபராசக்தியாக ஒரு ராணுவ கட்டுப்பாடோடு ஒரு பெண் ஒரு நாட்டை ஆள முடியும் ஒரு ஒன்றரை கோடி தொண்டர்களை வழிநடத்த முடியும் என்பதை வரலாற்றிலே பதிவு செய்து நம் பெற்றதில் நிறைந்திருக்கிற பலநல்ல திட்டங்களை தந்து இருக்கிற புரட்சித்தலைவி அம்மா அந்த இருவரும் தலைவர்களுடைய வாழ்த்துக்களுடன் ஆசீர்வாதத்துடனும் இன்றைய நம்முடைய ஆற்றல் மிகுந்த பொதுச் செயலாளர் இரண்டு தலைவர்களுக்கு பின்னால் மிகப் பொருத்தமாக இந்த தலைவர்களால் இணைந்து உருவாக்கப்பட்டு ஒரு ஒன்றரை கோடி தொண்டர்களாக இருந்தவர்களை இன்றைக்கு இரண்டு கோடிக்கு எட்டுகிற அளவிற்கு உருவாக்கி தலைவர் காலம் அம்மா காலம் போல ஒரு பாச உணர்ச்சி நிறைந்த குடும்பம் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்பதை நடைமுறைப்படுத்திகாட்டி இருக்கிற எடப்பாடியார் ஆலோசனையின் பேரில் மிகப்பெரிய வீரவரலாறு மாநாடு நடைபெறுகின்றது. ஒரு வீர வரலாறை படைக்கிற அளவுக்கு அந்த தலைப்போடு நடைபெறுகிற மாநாட்டிற்கு உங்களை எல்லாம் உற்சாகத்தோடு பாச உணர்வோடு நம்முடைய ஆற்றல் மிகுந்த மாவட்ட செயலாளர்கள் இந்த தலைமை கழக வேண்டுகோளை கட்டளையாக ஏற்று நீங்கள் பங்கேற்க வேண்டும். இன்றைக்கு தமிழ்நாட்டில் இரண்டு தொழில் நகரம் சிவகாசி, கொங்கு மண்டலத்தில் திருப்பூர் இந்த ரெண்டு ஊர் தான் தமிழ்நாட்டில் பொருளாதாரத்தை நிர்ணயிக்கிற ஒரு சிறப்புக்குரிய புனிதமான மண்ணு. உழைத்தால் உயர முடியும் புரட்சித் தலைவரிடம் ஆட்டோகிராப் கேட்டால், 72 ல் உழைப்பவரே உயர்ந்தவர்னு போட்டு அவருடைய முழு பெயரை எழுதி கையில் கொடுப்பார். அப்படி உழைப்புக்கு பேர் போன ஊர் சிவகாசி. வடக்கு காசிபோல இது தெற்கு சிவகாசி. தென்காசி இரண்டு புனிதமானதாக இந்த மண்ணிலே இயக்கத்தை கட்டி காப்பதற்காக இன்றைக்கு எடப்பாடியார், அம்மா காலத்திலேயே நியமித்த மாவட்ட கழக செயலாளர்கள் உள்ளனர். 1980லே ஜனநாயக முறைப்படி இந்தியாவில் எந்த கட்சியும் நடத்தாத ஒரு அமைப்பு தேர்தலை புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஆணையிட்டு நடத்தினார். அந்த தேர்தல் நடக்கும்போது நெல்லை மாவட்டத்திற்கு ஒரு தேர்தல் ஆணையாளராக வந்தவர் என் அருமைச் சகோதரர்களே ராஜேந்திரபாலாஜி. ஒருநாள் களக்காடு ஒன்றியத்துக்கு அவர் ஆணையாளர் இன்னொரு நாள் மேலப்பாளையம் நகரத்துக்கு அவர் ஆணையாளர். சகோதரர் பரமசிவம் இளம்பெண்கள் இளைஞர்களை பற்றி உற்சாகப்படுத்தி பேசுகிறார். விருதுநகர் மாவட்டத்தில் இரண்டு செயலாளரும் இணைந்தால் எவ்வளவு பெரிய எழுச்சி பெற முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக நடைபெறுகிற இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வருகை தந்திருக்கிற இயக்கத்தையும் கட்டிக்காத்து பொதுச்செயலாளரையும் பாதுகாக்கிற கவசமாக பணியாற்றுகிற வாய்ப்பை பெற்றிருக்கிற இந்த இயக்கத்தினுடைய கோடான கோடி தொண்டர்களை வழிநடத்த அந்த தகுதியை பெற்று இருக்கிற பெருமைக்கும் அருமைக்கும் மரியாதைக்கும் உரிய தலைவர்கள் வந்திருக்கின்றனர். தொண்டர்கள் வாழ்ந்தால் கட்சி வாழும் அவன் அடங்கினால் சற்று முடங்கிவிடும். இது 73 புரட்சித்தலைவர் எழுதியது. இந்த பெருமை இந்த வரலாறு வேறு எந்த இயக்கத்துக்கு இருக்காது. கிராமத்தில் ஒரு கிளைக் கழகச் செயலாளராக உருவாகி ஒரு சாதாரண விவசாயி குடும்பத்தில் பிறந்து சேவல் சின்னத்தில் நின்று அம்மா காலத்தில் அமைச்சராக பொறுப்பேற்று தமிழ்நாட்டின் முதலமைச்சாராக உருவாகி ஒரு கிளைக் கழகச் செயலாளர் மாபெரும் மக்கள் இயக்கத்திற்கு பொதுச்செயலாளராக வரமுடியுமா என்று கேட்டால் அந்த வீர வரலாறு அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்துக்கு மட்டும்தான் உண்டு. இன்றைக்கு மக்கள் கொடுக்கிற துன்பத்தை சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை. திமுகவிற்கு முடிவு கட்டும் விதமாக அதிமுக எழுச்சி மாநாட்டிற்கு நீங்கள் அணி அணியாக திரண்டு மாநாட்டிற்கு வரவேண்டும் என்று பேசினார்.

கழக தொண்டர்களை வரவேற்க மதுரைக்காரங்க தயாராக உள்ளோம்
கழக அமைப்பு செயலாளர் ராஜன்செல்லப்பா பேச்சு

கூட்டத்தில் கழக அமைப்பு செயலாளர் ராஜன்செல்லப்பா பேசும்போது, புரட்சித் தலைவர் வழி வந்து நம்மையெல்லாம் ஆளாக்கி இன்றைக்கு மக்கள் மத்தியில் அண்ணா திமுகவை கட்டி காத்து வளர்த்து ஒப்படைத்துச் சென்றிருக்கிற நம்முடைய புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வணங்கி எதிர்காலம் அண்ணா திமுக உடையது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் இந்நாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் நாளைய தமிழகத்தின் முதலமைச்சர் அவர்கள் ஆலோசனையின்படி இந்த ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது. நேற்று இரண்டு மாநாட்டை பார்த்தோம். இன்றைக்கு மூணாவது மாநாடுபார்க்கிற வாய்ப்பு எங்களுக்கு கிடைத்திருக்கின்றது. மதுரையில் தான் மாநாடு நடத்தப்படும் அருமை அண்ணன் எடப்பாடியார் சொன்னார். இப்போது மாவட்டந்தோறும் மாவட்ட மாநாடுகளை நடத்தி முடித்து மதுரை மாநாடு வெற்றி மாநாடாக உங்கள் மூலம் வரஇருக்கிறது. இந்த மாநாட்டினுடைய பெயரை பார்த்தாலே உங்களுக்கு எல்லாம் தெரியும் வீர வரலாறு அது அண்ணா திமுகவுக்கு மட்டுமே. பொன்விழா 50 ஆண்டுகளை கடந்து வெற்றியோடு இருக்கிற இயக்கம் அனைத்திந்திய அண்ணா திமுக. எழுச்சி மாநாடு என்ற பெயரிட்டு இன்றைக்கு எழுச்சியோடு இருக்கிற விருதுநகர் மாவட்ட நிர்வாகிகளை பார்க்க நமக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. அப்படிப்பட்ட மாநாட்டிலே உங்களை எல்லாம் வரவேற்பதற்காகத்தான் நாங்கள் தயாராக உள்ளோம். மதுரையை சேர்ந்த நாங்கள் மாவட்ட பொறுப்பாளர்கள் தலைமை கழக நிர்வாகிகளோடு வந்திருக்கிறோம். உங்களுக்கெல்லாம் தெரியும். இந்த விருதுநகர் கொடுக்கிற உணவு பொருள்தான் எங்கள் மதுரைக்கு வந்து சேர்கிறது. இங்கே தயாரிக்கிற பட்டாசு தான் நாங்கள் மீனாட்சி அம்மன் ஊர்வலம் வருகிற பொழுது அந்த வெடிச்சத்தம் எங்களை எல்லாம் மகிழ்விக்கிறது. உங்களை எல்லாம் வரவேற்க காத்திருக்கிறோம். மதுரைக்கு வாருங்கள் அலையாக வாருங்கள். சோதனைகளை தாண்டி சாதனை படைத்த வரலாற்று நாயகன் இன்றைக்கு டெல்லி மாநகரம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிற அருமை அண்ணன் எடப்பாடியார் அழைத்திருக்கிறார். இன்றைக்கு தமிழகத்தின் தலைமை ஏற்க நாழரை ஆண்டு காலம் சிறப்பான ஆட்சி செய்த அருமை அண்ணன் எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சர் ஆக்குகிற அச்சாரம்தான் மதுரை மாநாடு. விருதுநகர் திரண்டு வாருங்கள். வெற்றியைத் தேடி தாருங்கள். என்று பேசினார்.

மூன்றாம் தலைமுறையின் சிறந்த தலைவராக எடப்பாடியார் உருவெடுத்துள்ளார்.
இளைஞர் பாசறை செயலாளர் பரமசிவம் பேச்சு

கூட்டத்தில் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் பரமசிவம் பேசும்போது, இன்றைக்கு அதிமுக என்ற மாபெறும் இயக்கத்தினுடைய ஒற்றை தலைமையாக மாங்கனி தேசத்தின் மனித நேயமிக்க தலைவராக தமிழகத்தில் இருக்கின்ற ஏழை எளிய மக்கள் எல்லாம் மீண்டும் எங்களை ஆள வர மாட்டீர்களா என்று எதிர்பார்த்த காத்திருக்கக்கூடிய எதார்த்த தலைவனாக ஒட்டுமொத்த இந்திய துணைக்கண்டமும் திரும்பிப் பார்க்கின்ற வகையிலே இந்த இயக்கத்தை வழிநடத்தி மூன்றாம் தலைமுறை தலைவராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டிருக்க கூடிய நான்காண்டு கால நல்லாட்சியிலே புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சொன்ன மக்களாட்சியின் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் சொன்ன நலத்திட்டங்கள் நிறைந்த ஆட்சியையும் ஒருங்கே தந்த நல்லாட்சி நாயகர் அண்ணன் எடப்பாடியார் அவர்கள் இன்றைக்கு இந்த இயக்கத்தின் சார்பாக ஒரு மிகப்பெரிய எழுச்சி மாநாட்டினை நம்முடைய மதுரையில் அறிவித்திருக்கிறார்கள். அன்பிற்கினிய பெரியவர்கள் நீங்கள் எல்லாம் இங்கே மூத்தவர்கள் இருக்கிறார்கள் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் நடத்திய மாநாட்டை பார்த்திருக்கிறேன் புரட்சி தலைவி அம்மா அவர்கள் நடத்திய மாநாட்டை பார்த்து இருக்கிறீர்கள் இன்றைக்கு அண்ணன் எடப்பாடியார் அவர்கள் அறிவித்திருக்கின்ற இந்த மாநாடு எவ்வாறு இருக்க வேண்டும் இந்திய துணைக்கண்டமே திரும்பி பார்க்கின்ற வகையில் மதுரை மாநாடு இருக்க வேண்டும். இன்றைக்கு இந்த விருதுநகர் மண்ணிற்கு நம்முடைய இயக்கத்தினுடைய மூத்த கழக நிர்வாகிகளை எல்லாம் இங்கே அனுப்பி ஒரு சிறப்பான ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்று அண்ணன் எடப்பாடியார் அவர்கள் பணித்ததனுடைய விளைவாக இன்றைக்கு இந்த கூட்டம் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது. இங்கே உங்களுடைய ஆற்றல் மிக்க மாவட்ட கழகத்தினுடைய செயலாளர் 24 மணி நேரமும் இந்த இயக்கத்திற்காக பணியாற்றிக் கொண்டிருக்கக்கூடிய இந்த மண்ணின் மைந்தர் கழகத்தினுடைய அமைப்புச் செயலாளர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலமையில் நடைபெறும் இந்த ஆலோசனைக்கூட்டம் மாநாடு போன்றே உள்ளது. அதுக்கு நீங்க ஏற்கனவே ட்ரைலர் ஓட்டி காமிச்சிட்டீங்க. விழாவில் வாழ்த்துரை வழங்கி இருக்கக்கூடிய கிழக்கு மாவட்ட செயலாளர் அண்ணன் ரவிச்சந்திரன் அவர்களுக்கும் அவரோடு பணியாற்றிக் கொண்டிருக்கிற அத்தனை முன்னாள் அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் வாழ்த்தக்களை தெரிவித்துக்கொள்கிறேன். மற்றும் இங்கே ஆலோசனை வழங்க வந்திருக்கக் கூடியவர்கள் தான் ரொம்ப முக்கியமானவங்க. அண்ணா திமுகவினுடைய வரலாற்றை என்னை போன்ற இளைஞர்கள் படத்தில் பார்த்து மாநாட்டு அரங்கத்தில் இருக்கிற கண்காட்சியை பார்த்து தெரிந்து கொள்கிறோம். ஆனால் இவர்களெல்லாம் அந்த வரலாறாகவே வாழ்ந்து இன்றைக்கு நமக்கெல்லாம் பாடமாக இருந்து கொண்டிருக்கிறார்கள். இந்த இளைய தலைமுறை எப்படி அண்ணா திமுகவையும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று இன்றைக்கு பாடமாக வரலாறாக வந்திருக்கக்கூடிய மூத்த நம்முடைய நிர்வாகிகள் சொல்லுகின்ற கருத்தை நாம் உள்வாங்க வேண்டும். மூன்றே விஷயம்தான். ஏன் இந்த மாநாடு. இளைய சமுதாயம் எதற்காக இந்த மாநாட்டிலே கலந்து கொள்ள வேண்டும். இந்த விருதுநகர் மண்ணில் இருந்து நாம் மதுரைக்கு புறப்பட்டு வந்து சேர வேண்டும் என்று மூன்றே கேள்விகள் தான். இன்றைக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய இந்த எழுச்சி மாநாடு அண்ணா திமுக ஒரு குலைந்து விட்டது, அண்ணா திமுக உதிரியாகி போய்விட்டது, அண்ணா திமுக எழுந்திருக்காது என்று சொன்ன எதிரிகள் முன்னால் அண்ணா திமுக மதுரை மண்ணிலிருந்து ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் சொல்வதற்காக நீங்கள் வரவேண்டும். இன்னைக்கு துரோகிகள் ஒற்றை ஆட்களாக நின்று அறைகூவல் விடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த துரோகிகளுக்கு பாடம் புகட்டுவதற்காக நாம் அங்கே செல்ல வேண்டும். பத்து லட்சத்துக்கு மேலான அண்ணா திமுக தொண்டன் அங்கே வந்து சேர்கின்ற பொழுது அடுத்த நாள் பேப்பரில் எழுதணும் மதுரையிலே அண்ணா திமுகவினர் இருந்தார்கள் என்பதற்கு பதிலாக அண்ணா திமுகவிற்கு உள்ளாக மதுரை இருந்தது என்ற செய்தியைத்தான் நாம் அடுத்த நாள் நாளிதழிலே பார்க்க வேண்டும். மனித தலைகள் மட்டும்தான் தெரிகின்ற அளவிலே ஒரு மிகப்பெரிய கூட்டத்தை நாம் கூட்ட வேண்டும். அதேபோல இன்றைக்கு இளைய தலைமுறைக்கு ஒரு மிகப்பெரிய வாய்ப்பு இந்த மாநாடு. 20வயதில் 30 சதவீதம் பேர் வாக்காளர்களாக இருக்கிறார்கள். அந்த தம்பிகள் அண்ணா திமுகவிலே புரட்சித்தலைவர் கண்ட சத்துணவு தந்த சரித்திர தலைவர் நல்லாட்சி, புரட்சித்தலைவி அம்மா அவர்கள் காத்த சமூக நீதி, எடப்பாடியார் இளைஞனுக்காக தந்த நல்லாட்சி 7.5 ஆக இருக்கட்டும் வேலை தேடிய இளைஞனுக்கு வேலை கொடுப்பவனாக மாற்றுவதற்காக அண்ணன் எடப்பாடியார் தந்த திட்டங்களாக இருக்கட்டும். இன்றைக்கு கொரோனா காலத்தில் ஒரு லட்சம் இளைஞர்களுக்கு அவர் வேலைவாய்ப்பை உருவாக்கி தந்த பாங்காக இருக்கட்டும் அடுத்த தலைமுறை இந்த இளைய சமுதாயம் அந்த மாநாட்டு பந்தலுக்கு வந்து பார்த்து தெரிந்து கொள்வதற்கு இங்கே இருக்கின்ற நீங்கள் ஒத்துழைப்பு செய்ய வேண்டும். இன்னைக்கு கம்ப்யூட்டர்லயும் செல்போனில் ரெட் கலர் ஸ்டேட்டஸ் மாநாட்டு லோகோவை ஸ்டேட்டஸ் வைத்தால் நாம் அரசியல் பண்றது வெளியே தெரிகின்ற ஒரு சூழ்நிலையிலே இன்றைக்கு நாம் அரசியல் பயணம் உள்ளது. உங்கள் பகுதியில் இருக்கின்ற இளைஞர்களை எங்களுடைய பாசறை மாவட்ட கழகத்தினுடைய செயலாளர் ஒன்றிய செயலாளர்கள் எல்லாம் ஒருங்கிணைத்து ஒரு ஐம்பது பேரா பைக்ல அந்தந்த பகுதிக்கு அனுப்புங்க அங்கிருக்கின்ற தம்பிமார்களிடம் திமுக விடியா வரலாறு கொள்கைகளையும் தெரிந்து கொள்வதற்காக மீண்டும் அந்த எடப்பாடியார் தலைமையில் அம்மாவினுடைய ஆட்சி அமையப்போகிற இந்த குருதியையும் சொல்லி அவர்களை மாநாட்டு பந்தலுக்கு அழைத்து வரவேண்டும். இந்த இளைய சமுதாயத்தை நீங்கள் பயன்படுத்த தவறினீர்கள் என்று சொன்னால் இன்னைக்கு லெட்டர் பேட் கட்சி பின்னாடி போலாமா சினிமா நடிகர்கள் பின்னாடி போலாமா இன்றைக்கு வாயை வைத்தே வடை சுட்ட அரசியல் செய்கிற தலைவர்கள் பின்னால் போலாமா என்று தடுமாறிக் கொண்டிருக்கின்ற இந்த இளைய சமுதாயம் இன்றைக்கு ஒரு ஜனநாயகம் மிக்க உயிரோட்டம் மிக்க இயக்கமாக இருக்கிற அண்ணா திமுகவில் இணைய வேண்டும் என்ற உணர்வு அந்த மாநாட்டு பந்தலுக்கு வந்தவுடன் வரும். எடப்பாடியார் மூன்றாம் தலைமுறை சிறந்த தலைவராக அண்ணா திமுகவை வழிநடத்த போகிறார் என்பதை அவர்கள் உணர்ந்து வருவதற்கு நீங்கள் அத்தனை பேரும் உறுதுணையாக இருக்க வேண்டும். என்று நீங்க பத்து லட்சம் பேர் கூட்டிட்டு வந்தீங்கன்னா ஒரு லட்சம் பேர் அதில் இளைஞர்கள் இருக்க வேண்டும் என்ற வேண்டுகோளை வைக்கிறேன். என்று பேசினார்.

கூட்டத்தில் கழக எம்ஜிஆர் இளைஞர் அணி துணைச்செயலாளர் சாத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன், திருவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ், கழக மகளிர் அணி துணை செயலாளர் முன்னாள் திருவில்லிபுத்துார் சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபாமுத்தையா, அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர், விருதுநகர் முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் கலாநிதி, அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் சிவகாசி ஒன்றிய முன்னாள் பெருந்தலைவர் வேண்டுராயபுரம் சுப்பிரமணியம், முன்னாள் அமைச்சர் திருவில்லிபுத்தூ்ர் நகரக் கழக செயலாளர் இன்பத்தமிழன், மேற்கு மாவட்ட கழக அவைத்தலைவர் வழக்கறிஞர் விஜயகுமார், கிழக்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் முன்னாள் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சி.சுப்பிரமணியம், முன்னாள் மாவட்ட கழக செயலாளர் கே.கே.சிவசாமி, கழக அம்மா பேரவை துணைச் செயலாளர் வழக்கறிஞர் சேதுராமானுஜம், கழக சிறுபாண்மை பிரிவு துணைத் தலைவர் சித்திக், விருதுநகர் மேற்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கிருஷ்ணராஜ், மாவட்ட ஊராட்சி குழு சேர்மன் வசந்திமான்ராஜ், மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் எஸ்.என்.பாபுராஜ், மாவட்ட மகளிர் அணி செயலாளர் சுபாஷினி, மாவட்ட கழக இணைச்செயலாளர் அழகுராணி, மாவட்ட அண்ணா தொழி்ற் சங்க செயலாளர் பாண்டியன்

விருதுநகர் நகரக் கழக செயலாளர் முகமது நயினார், வெம்பக்கோட்டை ஒன்றிய பெருந்தலைவர் பஞ்சவர்ணம், சிவகாசி வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் புதுப்பட்டி வி.ஆர்.கருப்பசாமி, விருதுநகர் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் கே.கே.கண்ணன், விருதுநகர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் தர்மலிங்கம், விருதுநகர் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர், மாவட்ட கவுன்சிலர் கே.ஏ.மச்சராஜா, அமைப்பு சாரா ஓட்டுநர் அணி மாவட்ட செயலாளர் சேதுராமன், அண்ணா தொழிற்சங்க மாநில இணைச்செயலாளர் சங்கரலிங்கம், மாவட்ட கவுன்சிலர் தடங்கம் நாகராஜ்,
விருதுநகர் கிழக்கு மாவட்ட அவை தலைவர் ஜெயப் பெருமாள், மாவட்ட இணைச்செயலாளர் ராஜேஸ்வரிவாசுதேவன், துணைச்செயலாளர் மாவட்ட கவுன்சிலர் இந்திரா கண்ணன், கிழக்கு மாவட்ட கழக துணைச் செயலாளர் கே. வி.பூபாலன், கிழக்கு மாவட்ட கழக பொருளாளர் குருசாமி, வத்ராயிருப்பு வடக்கு ஒன்றிய செயலாளர் சுப்புராஜ், வத்திராயிருப்பு தெற்கு ஒன்றிய செயலாளர் சேதுவர்மன், ராஜபாளையம் வடக்கு ஒன்றிய செயலாளர் குருசாமி, ராஜபாளையம் தெற்கு ஒன்றிய செயலாளர் நவரத்தினம், சிவகாசி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆரோக்கியராஜ், சிவகாசி தெற்கு ஒன்றிய கழக செயலாளர் கருப்பு என்ற லட்சுமிநாராயணன், சிவகாசி மேற்கு ஒன்றிய கழக செயலாளர் வெங்கடேஷ், ராஜபாளையம் வடக்கு நகரக் கழக செயலாளர் வழக்கறிஞர் துரைமுருகேசன், ராஜபாளையம் தெற்கு நகர கழக செயலாளர் பரமசிவம், சிவகாசி மாநகராட்சியின் பகுதி கழக செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, சரவணகுமார், கருப்பசாமிபாண்டியன், சாம் என்ற ராஜா அபினேஸ்வரன், காரியாபட்டி மேற்கு ஒன்றிய கழக செயலாளர் ராமமூர்த்திராஜ், காரியாபட்டி கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் வழக்கறிஞர் தோப்பூர் முருகன், சாத்தூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் கே.எஸ்.சண்முகக்கனி. மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் தேவதுரை, நரிக்குடி ஒன்றிய கழக செயலாளர் பூமிநாதன், திருச்சுழி தெற்கு ஒன்றிய கழக செயலாளர் முத்துராமலிங்கம், திருச்சுழி வடக்கு ஒன்றிய செயலாளர் முனியாண்டி, அருப்புக்கோட்டை தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் முன்னாள் யூனியன் சேர்மன் வாசுதேவன், அருப்புக்கோட்டை வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் சங்கலிங்கம், நரிக்குடி கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் ராவிச்சந்திரன், வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் தங்கவேல், வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் மணிகண்டன், அருப்புக்கோட்டை கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் சக்திவேல்பாண்டியன், சாத்தூர் நகரக் கழக செயலாளர் எம்.எஸ்.கே.இளங்கோவன், சிவகாசி பொதுக்குழு உறுப்பினர் சித்துராஜபுரம் பாலாஜி, சாத்தூர் பொதுக்குழு உறுப்பினர் வேலாயுதம், விருதுநகர் பொதுக்குழு உறுப்பினர் அருணாநாகசுப்ரமணியம், அருப்புக்கோட்டை பொதுக்குழு உறுப்பினர் வீர சுப்பிரமணியம், திருவில்லிபுத்தூர் பொதுக்குழு உறுப்பினர் தமிழரசி கனகராஜ், திருச்சுழி பொதுக்குழு உறுப்பினர் பழனி, சேத்தூர்பேரூராட்சி கழகத்தினுடைய செயலாளர் பொன்ராஜ் பாண்டியன், செட்டியார்பட்டி பேரூர் கழகச் செயலாளர் அங்குதுறைபாண்டியன், மம்சாபுரம் பேரூராட்சி செயலாளர் ராஜேஷ்குமார், வத்ராயிருப்பு பேரூர் கழக செயலாளர் வைகுண்டமூர்த்தி, கொடிக்குளம் பேரூர் கழக செயலாளர் சங்கரமூர்த்தி, சுந்தரபாண்டியன் பேரூ்ர் கழக செயலாளர் மாரிமுத்து, புதுப்பட்டி பேரூர் கழக செயலாளர் ஜெயக்கிரி, காரியாபட்டி பேரூர் கழகச் செயலாளர் விஜயன், மல்லாங்கிணறு பேரூர் கழகச் செயலாளர் அழகர்சாமி,
ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றிய கழக செயலாளர் மயில்சாமி, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் முத்துப்பாண்டி, மாவட்ட விவசாய அணி செயலாளர் முத்தையா, மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் முத்துராஜ், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் பிலிப்வாசு, மாவட்ட மீணவர் அணி செயலாளர் காசிராஜன், மாவட்ட கழக பொருளாளர் தேன்ராஜன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் குறிஞ்சி முருகன்,
மாவட்ட அண்ணா தொழிற் சங்க கௌரவத் தலைவர் குருசாமி, அரசு பேருந்து விருதுநகர் மண்டல செயலாளர் குருச்சந்திரன், அண்ணா மின்சார பிரிவு செயலாளர் ஜெய்சங்கர், டாஸ்மாக் மாதவன், முன்னாள் சேர்மன் விருதுநகர் சாந்தி மாரியப்பன், முன்னாள் நகர்மன்ற துணைத்தலைவர் மாரியப்பன், விருதுநகர் எம்ஜிஆர் மன்ற செயலாளர் நாகசுப்பிரமணியம், அம்மா பேரவை செயலாளர் கணேஷ்குரு, விருதுநகர் நகரமன்ற உறுப்பினர்கள் வெங்கடேஷ், சரவணன், மிக்கேல்ராஜ், வர்த்தக அணி செயலாளர் செல்வராஜ், மாவட்ட வழக்கறிஞர் பொருளாளர் ஸ்ரீதர், மாவட்ட வழக்கறிஞர் மாரிஸ்குமார், மாவட்ட இலக்கிய அணி தலைவர் சிவகாசி என்ஜிஓ காலனி மாரிமுத்து, மாவட்ட எம்ஜிஆர்மன்ற துணைசெயலாளர் ஸ்ரீராம் பாலகிருஷ்ணன், முன்னாள் நகர கழக செயலாளர் சாவிநாகராஜ், மருது, மாவட்ட மகளிர் அணி சாந்தி, வழக்கறிஞர் ரவி, பாண்டியராஜன், வேலாயுதம், ராமு, வழக்கறிஞர் ராமமூர்த்தி, சரவணன், கந்தவேல், பத்மாவதி, பட்டம் புதூர் சேகர், மாவட்ட வழக்கறிஞர் ராஜசிம்மன், விருதுநகர் கிழக்கு அம்மா பேரவை மாவட்ட செயலாளர் கே.ஏ.மச்சேஸ்வரன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் கலைச்செல்வி, வழக்கறிஞர் பாலமுருகன், வீரேசன், பரமசிவம், வேங்கைமார்பன், சிவகாசி மாநகர கவுன்சிலர் கரைமுருகன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மணிமேகலை, ராமநாதன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கருப்பசாமி பாண்டியன், மோகனவேல், மாணிக்கம், சுந்தர்கொண்டலசாமி, ராஜூ, சேரன இஸ்மாயில், முத்துமணி, விஜயகுமார், வெம்பக்கோட்டை ஒன்றிய துணைப் பெருந்தலைவர் ராமராஜ்பாண்டியன், மாவட்ட கவுன்சிலர் வேல்முருகன், அருப்புக்கோட்டை நகர அம்மா பேரவை செயலாளர் சோலை சேதுபதி, திரைப்பட நடிகர் கே.சி.பிரபாத், முன்னாள் அண்ணா தொழிற்சங்க அரசு பேருந்து மண்டல செயலாளர் ராமர், ஆவியூர் குமார். நரிக்குடி சந்திரன், மகாமூர்த்தி, வழக்கறிஞர் லோகையாசாமி, மாவட்ட கவுன்சிலர்கள் வேல்ராணி வெங்கடேஷ், நிர்மலா ஜெயக்குமார், கணேசன், மாவட்ட கவுன்சிலர் மகாலட்சுமி கருப்பசாமி, மகாலட்சுமி முத்துகிருஷ்ணன், மாவட்ட ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய, நகர கழக நிர்வாகிகள், பேரூர் கழக நிர்வாகிகள், வார்டு கழக நிர்வாகிகள் அனைத்து சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *