• Wed. Mar 18th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

திடீர் ஹிந்தி எதிர்ப்பு பிரச்சனையை என்ஐஏ விசாரிக்க இந்துமக்கள்கட்சி கோரிக்கை..,

ByKalamegam Viswanathan

Mar 18, 2026

மதுரை உள்பட தமிழக முழவதும் உள்ள ரயில் நிலையங்களில் ஹிந்தியை அழித்து மொழி பிரச்சனையை உண்டாக்கும் பிரிவினைவாதி திருமுருகன் காந்தி என்ற டேனியல் காந்தியை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யக்கோரியும், ரயில் நிலையங்களில் பாதுகாப்பை பலப்படுத்த கோரியும், திடீர் ஹிந்தி எதிர்ப்பு பிரச்சனையை என்ஐஏ விசாரிக்க கோரியும் மத்திய அரசுக்கு இந்துமக்கள்கட்சி கோரிக்கை/ அறிக்கை செய்தி!

திருமுருகன் காந்தி என்கின்ற பெயரில் உலா வரும் டேனியல் காந்தி என்பவர் முள்ளிவாய்க்கால் ஈழத்தமிழர்கள் இறப்பை முன்வைத்து
மே – 17 என்கின்ற பெயரில் ஒரு இயக்கத்தை வைத்து இந்து தர்மத்தை, மத்திய‌ அரசை விமர்சிப்பது,பிராமணர்கள் மீது அவதூறு பரப்புவது,ஹிந்தி எதிர்ப்பு என்று மொழி பிரச்சனைகளை தூண்டுவது மட்டுமே இவரது வாடிக்கையான பணியாகும்.

அர்பன் நக்சல், தேச விரோத காரியம், மக்களுக்கு அரசு அறிவிக்கும் நல்ல திட்டங்களை எதிர்த்து ஆட்களை திரட்டி போராடுவது என பல முகங்கள் டேனியல் காந்திக்கு உண்டு.

இப்போதைய முகம் சம்பந்தேமே இல்லாமல் சில நாட்களுக்கு முன்பாக ஹிந்தி எதிர்ப்பு என்கின்ற பெயரில் டேனியல்காந்தி குண்டர்களுடன் சென்னை பூங்கா இரயில்வே நிலையத்தில் நுழைந்து அங்குள்ள விளம்பர பலகைகளில் உள்ள ஹிந்தி எழுத்தை மட்டும் மை வைத்து அழிப்பதும்,ரயில்வே மத்திய காவல்துறையினரை மொழி ரீதியாக பயணிகள் மத்தியில் ஒருமையில் பேசி மிரட்டியும்,இரயில்வே சொத்துக்களை சேதப்படுத்தும் விதமாகவும் மொழி பிரச்சனையை உண்டாக்கும் விதமாகவும் செயல்பட்டது மட்டுமல்லாமல் அதனை ஒரு பெரிய சாதனையை போல் காட்டி வருகிறார்.

ஆனால் ஒரு சிறிய சந்தேகம். ரயில் நிலையத்தில் எழுதப்பட்டிருக்கும் ஹிந்தி எழுத்துக்களை கருப்பு பெயிண்ட் கொண்டு அழித்துவிட்டால் ஹிந்தி மொழி இந்தியாவிலிருந்து மறைந்து போய்விடுமா? அதே நேரத்தில் தமிழ் மொழி திடீரென்று தழைத்து மலர்ந்துவிடுமா? இது எந்த மொழி விஞ்ஞான புத்தகத்தில் இருக்கிறது என்று தெரியவில்லை.

தமிழகத்தில் ஹிந்தி படித்த வடமாநிலத்தவர்களுக்கு மட்டுமே வேலை வாய்ப்பு ழங்கப்படுறது என்று டேனியல்காந்தி மத்திய அரசை விமர்ச்சிக்கிறார்கள்.அதேபோல் தமிழக அரசு விற்பனை மதுகடைக்களை திறந்து வைத்து தமிழக இளைஞர்களை குடிகாரர்களாகவும் அவர்களது வாழ்க்கையை சீர்குழைக்கும் விதமாகவும் மதுக்கடைகளை எதிர்த்து தமிழக அரசுக்கு கண்டித்து என்றைக்காவது போராட்டம் நடத்தியதுண்டா?

தமிழக அரசு வேலை வாங்கி தருவதாக லட்சணக்கணக்கான ரூபாய் லஞ்சம் வாங்கி தமிழக இளைஞர்களை ஏமாற்றி லஞ்ச வழக்கில் சிக்கிய செந்தில்பாலாஜி, கே.என்.நேரு போன்ற அமைச்சர்களை கண்டிக்க துப்பில்லாமல் டேனியல்காந்தி மத்திய அரசை கண்டிப்பது வேடிக்கையாக இருக்கிறது.

தமிழ்த்தாய் வாழ்த்து படிக்கமாட்டோம்,தமிழ்புத்தாண்டு வாழ்த்து சொல்ல மாட்டோம், பொங்கல் வைத்து தை தமிழர் திருநாளை கொண்டாட மாட்டோம்.
தமிழிலே பெயர் வைக்க மாட்டோம்,தமிழிலே வழிபாடு நடத்தமாட்டாம்,தமிழர் கலாச்சாரத்தை பின்பற்ற மாட்டோம்,தமிழர்களின் பாரம்பரிய உடைகளை அணியமாட்டோம் என்று சில மத அமைப்புகள் கூறும் போது அவர்களை கண்டித்து இது போன்று டேனியல்காந்தி போராட்டம் நடத்தியதுண்டா?

தமிழ் காட்டுமிராண்டி மொழி என்று கூறிய ஈவெராவை தலையில் வைத்து கொண்டாடும் தற்குறிகளுக்கு தமிழை பற்றி இவ்வவளவு பாசமா?

டேனியல்காந்தி என்ற பெயர் முதலில் தமிழ் பெயரா?

தமிழ் வளர வேண்டும் என்றால் தமிழே தெரியாத மற்ற மாநில மக்களிடம் தமிழை கொண்டு சென்று கற்பிக்க வேண்டும். ஆனால் அப்படி எத்தனை பேரிடம் தமிழ் கொண்டு சென்றிருக்கிறீர்கள் என்றால் கணக்கே கிடையாது. தமிழ்நாட்டிலேயே தமிழ் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை தினமும் குறைந்து கொண்டிருக்கிறது. அந்த நிலைமையில் ரயில் நிலையத்துக்கு போய் கருப்பு பெயிண்ட் கொண்டு இந்தி எழுத்தை அழிப்பதை விட நமது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகனுக்கு இரண்டு நாள் தமிழ் பாடம் சொல்லிக் கொடுத்திருந்தால் குறைந்தபட்சம் அமைச்சர் வீட்டிலாவது தமிழ் வளர்ந்திருக்கும்.

அதோடு உங்களுடைய இன்னொரு அமைச்சர் அவர்களின் பையன்களுக்கும் இரண்டு பாடம் தமிழ் கற்றுக் கொடுத்திருந்தால் தமிழுக்கு இன்னும் ஒரு குடும்பம் கூட சேர்ந்து இருக்கும். ஆனால் அந்த வேலை எல்லாம் கஷ்டம். ரயில் நிலையத்தில் கருப்பு மை ஊற்றுவது தான் சுலபம்.

தமிழை வளர்ப்பதற்கு ஆயிரம் வழிகள் இருக்கும்போது ரயில்வே ஸ்டேஷனில் இருக்கும் ஹிந்தி எழுத்துகளை தார் வச்சு அழித்தால் தமிழ் வளர்ந்துவிடும் என்று உங்களுக்கு யார் இந்த மாஸ்டர் பிளான் கொடுத்தார்கள் என்பது தான் பெரிய மர்மம்.

உண்மையை சொன்னால் தேர்தல் நேரம் வந்துவிட்டதால் மக்கள் எளிதில் உணர்ச்சி வசப்படும் மொழி பிரச்சனையை கையில் எடுத்தால் நல்ல மைலேஜ் கிடைக்கும் என்று அரசியல் ஆலோசனை நிறுவனங்கள் பெரிய சதிதிட்டம் போட்டிருக்கிறார்கள்.

அந்த சதிதிட்டத்தில் பணம் கொடுத்து உங்களை போன்ற வால் அமைப்புகளை தூண்டி விடுகிறார்கள். இந்த நாடகம் அனைத்தும் தமிழக மக்களுக்கு நன்றாக தெரியும்.

முதலில் பத்து அல்லது பதினைந்து பேர் ரயில் நிலையத்துக்கு போய் எழுத்தை அழிப்பார்கள். அதே நேரத்தில் கேமராவுடன் சன் டிவி தயாராக இருக்கும். வீடியோ எடுத்தவுடன் அது சன் நியூஸில் பிரேக்கிங் நியூஸ் ஆகும். அதைப் பார்த்து மற்ற சேனல்கள் எல்லாம் காப்பி பேஸ்ட் போட்டு ஒலிபரப்பும். அது தான் தற்போது மதுரை திருப்பரங்குன்றம் உள்பட தமிழக முழுவதும் ரயில் ரயில் நிலையங்களில் நக்சல் கும்பல் இந்தி எழுத்துக்களை அழித்து கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் அந்த நேரத்தில் நீங்கள் கிராமங்களுக்கு போய் நான்கு பிள்ளைகளுக்கு தமிழ் பாடம் சொல்லிக் கொடுத்திருந்தால்… குறைந்தபட்சம் அந்த நான்கு பிள்ளைகளின் வீட்டிலாவது தமிழ் வாழ்ந்திருக்கும். இப்போது நடந்தது என்னவென்றால் ரயில் நிலையத்தில் ஒரு வாரம் கழித்து அந்த ஹிந்தி எழுத்தை மீண்டும் எழுதி விடுவார்கள்… ஆனால் நீங்கள் போட்ட கருப்பு மை மட்டும் தான் இன்னும் சுவரில் காய்ந்து கொண்டிருக்கும்.
தமிழர் போர்வையில் ஒழிந்திருக்கும் ஆங்கிலேயனுக்கு பிறந்த தமிழீன விரோதி டேனியல் காந்தி ஏன் ரயிலில் விழவில்லை என்று மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை!
சட்டம் ஒழுங்கு சீர்குழைந்து கிடக்கிறது.இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி கிடக்கிறார்கள்,லட்சக்கணக்கான படித்த பட்டதாரி இளைஞர்கள் அரசு வேலைவாய்ப்பு இல்லாமல் வீட்டில் முடங்கி கிடக்கிறார்கள்.
தமிழகத்தில் இதுபோன்று எத்தனையோ பிரச்சனைகள் போராட்டங்கள் நடக்கிறது.அதனை பற்றி எல்லாம் இந்த டேனியலுக்கு கவலை இல்லை.இதனை மறைப்பத்தற்காகவும்,திசை திருப்புவதற்காகவும் திமுகவின் கைகூலியாக இது போன்ற ஹிந்தி எதிர்ப்பு பிரச்சனை எல்லாம் திடீரென உருவாக்கி வருகிறார் இந்த தீடீர் ஹிந்தி எதிர்ப்பு போராளி டேனியல்காந்தி.

இவருடைய சுயநலத்திற்காக இவர் உடன் இருக்கும் சிவா திலீபன் என்கின்ற நபர் இரயில் முன் பாய்ந்து அந்த ரயிலை கவிழ்க்கும் முயற்சியிலும் ஈடுபட்டிருக்கிறார், ரயில்வே இருப்பு பாதையை இரயில்வே கேட் இருக்கும் பாதையை தவிர மற்ற இடங்களில் கடப்பது தண்டனைக்குரிய குற்றம்.

அதுவும் தெரிந்தே ரயில் முன் பாய்வது கடுமையான குற்றம், அந்த ரயிலில் எத்தனை‌ பயணிகள் பயணித்திருப்பர், திடீரென ரயில் லோகோ பைலட் சடர்ன் பிரேக் சிஸ்டத்தை உபயோகத்திருந்தால் உள்ளே‌ பயணம் செய்த பயணியர்கள் நிலைமை என்னவாகியிருக்கும்?

அந்த நபர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறுகிறார் என்பது ஒருபக்கம் இருந்தாலும் மற்ற பயணிகளை கொல்லும் நோக்கில் தற்கொலை செய்ய முயன்ற இப்படிப்பட்ட நபரை ஒரு முதலமைச்சர் மருத்துவமனையில் சென்று சந்திப்பது அபத்தாமாக இல்லையா, கண்டிக்க வேண்டிய முதலமைச்சரே ஆதரவுக்கரம் நீட்டியிருப்பது அரசியல் சாசனத்தின் மீது சத்திய பிராமாணம் எடுத்த முதலமைச்சர் செய்கின்ற காரியமா இது என்ன அநியாயம்.
முதலமைச்சர் திலீபனை சென்று பார்த்தபின்பு திமுக கூட்டணி கட்சியினரும் பார்த்தது என்பது திலீபனை தற்கொலைக்கு தூண்டி இருப்பது போல் தெரிகிறது.

வருகின்ற சட்டமன்றத் தேர்தலை மையப்படுத்தி தமிழக முதல்வரும் அவருடைய கூட்டணி கட்சித்தலைவர்களும் மொழி பிரச்சனையை தூண்டி தமிழக இளைஞர்களின் வாழ்க்கைகளை சீர்குழைக்க திட்டமிடுகிறார்களா என்ற சந்தேகம் தமிழக மக்களுக்கு எழுந்துள்ளது.

வருகின்ற தேர்தலில் ஹிந்திக்காரர்கள் மட்டுமல்ல ஹிந்தி படிக்க எழுத தெரிந்தவர்கள் யாரும் திமுகவுக்கோ அல்லது திமுக கூட்டணி கட்சிகளுக்கோ தமிழர்களை தவிர வேற யாரும் வாக்களிக்க வேண்டாமென்று ஸ்டாலின் அவர்கள் கூற தைரியம் இருக்கா?

வடமாநிலங்களில் இருந்து சுற்றுலாவிற்கும்,கோவில் புண்ணியஸ் தலங்களுக்கு வரும் ஹிந்திக்காரர்களுக்கு ஒவ்வொரு ஊரையும் கடந்து செல்லும் போது ஹிந்தி தெரிய வேண்டுமென்பதற்காக தான் ரயில் நிலையங்களில் இத்தனை காலங்களாக ஹிந்தி எழுத்து இருந்து வந்தது.என்னமோ திடீரென மத்திய அரசு ரயில் நிலையங்களில் ஹிந்தியை திணிக்கிறது என்று அரசியலுக்காக தவறான விசமபிரச்சாரம் செய்து அதனை அழிக்க நினைப்பது இந்துமக்கள்கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

தமிழகத்தில் ஹிந்தி மொழியை திணிக்கிறார்கள் என்று இந்திய மொழியான ஹிந்தி எழுத்துக்களை அழிக்க நினைக்கும் இந்த கும்பல் அரேபிய கல்லூரி,மதரஷா, பள்ளிவாசல் மற்றும் தொழில் நிறுவனங்கள் இருக்கும் அரபு நாட்டு மொழியான உருது எழுத்துக்களை இதுபோன்று அழிக்க முடியுமா?அதேபோல் முதலமைச்சர் குடும்பம் நடத்தும் சன்சைன்ஸ் பள்ளி உள்பட தமிழக திமுக அமைச்சர்கள் நடத்தும் பள்ளிகளில் கட்டாய பாடமாக சொல்லி கொடுக்கும் ஹிந்தியை எதிர்த்து பள்ளிளுக்கு முன்பாக போராட்டம் நடத்த முடியுமா?

தமிழீனத்தலைவர் மாவீரர் பிரபாகரன் குடும்பத்தார்கள் உள்பட லட்சக்கணக்கான ஈழத்தமிழ் மக்களை கொன்று குவிக்க காரணமாக இருந்த காங்கிரஸ்,திமுகவுடன் கூட்டு சேர்ந்துகிட்டு ஈழத்தமிழீன மக்களுக்கு துரோகம் விளைவித்த தமிழீனத்துரோகி டேனியல்காந்திக்கு தமிழ்ப்பற்றை பற்றி பேச என்ன தகுதி இருக்கு?

உண்மையிலே தமிழ் மீது பற்றுகொண்டது உண்மை என்றால் தமிழர் போர்வையில் ஒழிந்திருக்கும் தமிழீன விரோதி டேனியல் காந்தி ஏன் ரயிலில் விழவில்லை?திலிபன் தவறி விழுந்தாரா?அல்லது ரயிலில் தள்ளி விடப்பட்டாரா?

மேலும் ஏதேனும் கோரிக்கையை முன்வைத்து ரயில் நிலையங்களில் இந்து அமைப்புகள் அல்லது மற்ற அரசியல் கட்சிகளோ ரயில் மறியல் போராட்டம் செய்யப்போனால் ரயில் நிலைய நுழைவாயிலையே தமிழக காவல்துறை தடுத்து நிறுத்தி கைது செய்யும் போது ரயில்வே நிலையத்திற்குள் அத்துமீறி நுழைந்து ஹிந்தி எழுத்துக்களை அழிக்கிறார்கள் என்றால் அவர்களுக்கு யார் அனுமதி அளித்தது.அவர்களை ஏன் தமிழக காவல்துறையும்,மத்திய ரயில்வே காவல்துறையும் தடுத்து நிறுத்தவில்லை.

இதுபோன்ற ஹிந்தியை அழிக்க போகிறோம் என்று ரயில் நிலையங்களில் அத்து மீறிவது ரயிலில் பயணிக்கும் பொதுமக்களுக்கும், ரயில்வே நிலைங்களுக்கும் பாதுகாப்பற்ற சூழ்நிலை ஏற்படுகிறது.

ஒரு இரயில்வே நிலையத்திலே குறிப்பாக நடைமேடைக்கு இரயில்வே சம்பந்தம் இல்லாத ஆட்கள் சென்றால் ஒன்று பயணச்சீட்டு வேண்டும், இல்லாவிட்டால் நடைமேடைச்சீட்டு வேண்டும்.

இரண்டுமே இல்லாதவர்கள்‌ மீது அபராதம், அல்லது சிறைத்தண்டனை, அல்லது இரண்டுமே விதிக்க இரயில்வே காவல்துறைக்கு (RPF) அதிகாரம் உள்ளது.

ஆனால் ரயில் நிலையத்தில் அத்துமீறி சென்ற டேனியல் காந்தி உள்பட அவருடன் சென்றவர்கள் மீது இரயில்வே காவல்துறையோ (RPF) அல்லது இருப்பு பாதை காவல்துறையோ (மாநில அரசு) ஒரு நடவடிக்கையும் எடுக்காதது ஆச்சரியமும், வர்த்தமும் அளிக்கிறது.

சட்டமன்ற தேர்தல் நடைபெறுகின்ற வேலையில் இந்த அர்பன் நக்சல் டேனியல் காந்தி தலைமையில் சிலர் சேர்ந்து இரயில்வே சொத்துக்களை சேதப்படுத்தியது மட்டுமல்ல தேச விரோதமாகவும், மொழி‌ பிரிவினை ஏற்படுத்தும் விதமாகவும் பேசியுள்ள காணொளி தற்போது சமுகவலைய தலங்களில் வைரல் ஆகி வருகிறது.
இதனால் வடமாநிலங்களில் இணக்கமாக வசிக்கும் தமிழர்களுக்கும், வடமாநிலங்களில் தொழில் செய்யும் தமிழர்களுக்கும் மிகப்பெரிய பாதிப்பையும், ஆபத்தையும் உண்டாக்கும்.

எனவே தேர்தல் விதிமுறைகள் இருந்தும் அதனை சீர்குழைக்கும் விதமாக ஹிந்தி எதிர்ப்பு என்ற போர்வையில் ஒழிந்து கொண்டு இந்திய இறையாண்மைக்கும்,இந்திய ரயில்வே சட்டங்களுக்கு எதிராகவும்,ரயிலில் பயணிக்கும் பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாகவும், மாநிலங்களுக்குள்ள மக்களிடையே கலவரத்தையும் வன்முறையும் உருவாக்கும் நோக்கத்தில் மொழி பிரச்சனையை வேண்டுமென்றே திட்டமிட்டு தூண்டும் விதமாக சென்னை,மதுரை உள்பட தமிழகம் முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் ஹிந்தி எழுத்துக்களை அழித்து வரும் நக்சல்வாதி திருமுருகன் காந்தி என்ற டேனியல்காந்தியையும்,அவரது நக்சல் கும்பல்களையும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யவேண்டும்.

ரயிலில் விழுந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள சிவா திலீபன் என்பவர் மீதும் வழக்கு பதிந்து, யார் அவரை இந்த தாக்குதல் முயற்சிக்கு தூண்டி விட்டனர் என்பதையும் கேட்டு வாக்குமூலம் பெற்று அவரையும் மற்றும் சம்பந்தப்பட்டவர்களையும் கைது செய்யவேண்டும்.

ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்தும் டேனியல் காந்திக்கு பின்னால் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளும்,பிரிவினைவாத அரசியல் கட்சிகளும் ஏதேனும் பின்னால் இருக்கிறார்களா என்று என்ஐஏ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
ஹிந்தி எதிர்ப்பு என்ற பெயரில் ரயில் நிலையங்களில் பிரிவினைவாத சக்திகள் இந்தி எழுத்துக்களை அழித்து வருவதை உடனடியாக தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் உள்ள ரயில்களில் பயணிக்கும் பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதியும்,பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் தமிழக ரயில் நிலையங்களில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டுமென மத்திய அரசுக்கு இந்த அறிக்கையின் மூலமாக கோரிக்கையை சமர்பிக்கின்றது.