தமிழகத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் பிரச்சாரம் நடைபெறுகின்ற நிலையில் அதனை சீர்குழைக்கும் விதமாக உலகம் போற்றும் பாரதபிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடிஜீ அவர்களையும், முன்னாள் தமிழக முதலமைச்சர் திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்களையும் ஒரு கும்பல் ஆயுதங்களை தூக்கி விரட்டுவது போல் கார்ட்டூன் படம் போட்டு மக்கள் அதிகாரம் தமிழ்நாடு-புதுவை என்ற முகநூல் பக்கத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.இச்செய்தி தற்போது முகநூலில் பரவி வருவதை கண்டு இந்துமக்கள்கட்சி உள்பட பாரதபிரதமர் மோடிஜி மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியும் கொந்தளிப்பையும் உண்டாக்கி உள்ளது.

முகநூல் மற்றும் சமுகவலையதளங்களில் தேர்தல் சம்பந்தமான கருத்தை பதிவிடும் போது யார் மனதையும் புண்படுத்தி கேலியும் கிண்டலும் செய்யும் விதமாகவோ, கலவரத்தை தூண்டும் விதமாகவோ,யாரையும் அவமதித்து இழிவுபடுத்தும் விதமாகவோ, சர்ச்சைகளையும்,பிரச்சனைகளையும் உண்டாக்கும் விதமாகவோ பதிவிடக்கூடாதென்று தேர்தல் ஆணையம் விதித்துள்ள விதிமுறைகளை மீறி நம்நாட்டின் பாரதபிரதமரையும்,முன்னாள் தமிழக முதல்வரையும் அவமதிக்கும் விதமாக முகநூலில் கார்ட்டூன் படத்தை பதிவிட்ட நச்சல் அமைப்பான மக்கள் அதிகாரத்தை இந்துமக்கள்கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
மக்கள் அதிகாரம் என்ற போர்வையில் ஒழிந்து கொண்டு திமுகவிடம் கையூட்டு பெற்றுக்கொண்டு திமுக தூண்டுதலில் பேரில் தற்போது முகநூலில் விசம பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.இந்த அமைப்புகளுக்கு பின்னால் தமிழ் தேசம் என்று பேசக்கூடிய மொழி பிரிவினைவாத பல அமைப்புகளும் ஆதரவாக இருக்கிறார்கள்.
தேசவிரோத பிரிவினைவாத தடைசெய்யப்பட்ட மாவோயிஸ்ட் போன்ற நக்சல் அமைப்புகளின் மறுவடிவம் தான் இந்த மக்கள் அதிகாரம் அமைப்பு.
மத்தியில் ஆளும் பாஜக வடமாநிலங்களில் நக்சல் பயங்கரவாதத்தையும்,நக்சல் பயங்கரவாதிகளையும் ஒழித்து வருகிறார்கள்.ஆனால் தென்மாநிலங்களில் தமிழகத்தில் ஆட்சி செய்யும் திமுக ஆசியுடன் நக்சல்கள் மக்களோடு மக்களாக ஊடுறவி மக்கள் அதிகாரம்,மகஇக போன்ற பல்வேறு பெயர்களில் அமைப்புகளை உருவாக்கி சர்வ சுதந்திரமாக நக்சல் அமைப்பினர்கள் மக்கள் மத்தியில் பிரிவினையை உண்டாக்கி இந்திய தேசத்திற்கும், இந்திய சட்ட திட்டங்களுக்கும் எதிராக செயல்பட்டு வருகிறார்கள்.
தமிழகத்தில் சர்வாதிகார ஆட்சி செய்த தீயசக்தி திமுகவிற்கு வருகின்ற தேர்தலில் தமிழக மக்கள் தக்கப்பாடம் புகட்டப்போகிறார்கள் என்ற அச்சத்தில் தான் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் பாரதபிரதமரையும், முன்னாள் தமிழகமுதல்வரையும் மக்கள் மத்தியில் அவமானப்படுத்த வேண்டுமென்று உள்நோக்கத்தோடு கேலியும்,கிண்டலுமாக
மக்கள் அதிகார அமைப்பில் உள்ள கும்பல்கள் பாரதபிரதமரையும் முன்னாள் தமிழக முதல்வரையும் ஆயுதங்களுடன் தாக்க திட்டமிட்டது போல் இந்த கார்ட்டூன் அமைந்துள்ளது.
ஆகவே பாரதபிரதமரையும், தமிழக முதல்வரையும் அவமதிக்கும் விதமாகவும்,பாரதபிரதமரின் கோடிக்கணக்கான தொண்டர்களின் மனதை புண்படுத்தும் விதமாகவும், ஆயுதங்களை தூக்கி கலவரத்தையும்,வன்முறையையும் தூண்டும் விதமாகவும், ஜனநாயகத்திற்கும் தேர்தல் விதிமுறைகளுக்கு எதிராகவும், மக்கள் மத்தியில் ஒரு தவறான விசம பிரச்சாரம் செய்யும் விதமாகவும், பாரதபிரதமரையும், தமிழக முன்னாள் முதல்வரையும் கொலை மிரட்டல் விடுக்கும் தோணியில் அவர்களை ஆயுதங்களை வைத்து தாக்குதல் நடத்துவது போல் கார்ட்டூன் படத்தை முகநூலில் பதிவிட்ட நக்சல் அமைப்பான மக்கள் அதிகாரத்தினர் மீது வழக்குபதிவு கைது செய்யவேண்டும்.
பொதுமக்களை அச்சுறுத்தி தேர்தலை சீர்குழைக்கும் வகையில் தேர்தல் விதிமுறைகளுக்கு எதிராகவும்,தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராகவும் தொடர்ந்து பதிவிட்டு வரும் மக்கள் அதிகாரம் தமிழ்நாடு புதுவை என்ற முகநூலை உடனடியாக முடக்க தமிழக தேர்தல் ஆணையமும்,தமிழக காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் அமைதியையும்,சட்டம் ஒழுங்கையும் சீர்குழைக்க திட்டமிடும் மக்கள் அதிகாரம் போன்ற பல்வேறு பெயர்களில் ஊடுறவுள்ள நக்சல் அமைப்புகளை மத்திய அரசு தடைசெய்ய வேண்டுமென இந்த அறிக்கையின் மூலமாக இந்துமக்கள்கட்சி புகார் அளிக்கிறது.
இப்படிக்கு
M.சோலைகண்ணன்
இந்துமக்கள்கட்சி
மதுரை மாவட்டத்தலைவர்.
நாள்:09/04/2026.



