மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பழமையான வன்னி மரம் மற்றும் அதன் அடியில் உள்ள வன்னி மரத்தடி விநாயகர் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இது கோவிலின் தல விருட்சங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இத்தலம் திருவிளையாடல் புராணத்துடன் தொடர்புடையது, மேலும் வன்னி மரத்தின் கீழ் இருக்கும் வன்னிமர விநாயகரை வழிபட்டால் நன்மைகள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

மேலும் வன்னி மரம் மிகவும் வசீகரமான மரம். இதனுடைய இலைகள் முதல் அனைத்தும் சிறப்பு வாய்ந்தது.அப்படி வரலாற்று சிறப்புமிக்க வன்னிமரம் அருகே திருக்கோவில் நிர்வாகம் சார்பில் சமையல் கூடம் வைத்து புளியோதரை, பொங்கல்,முருக்கு போன்ற பிரசாத பொருட்கள் தயாரித்து வந்தனர்.
அப்பொழுது சிலிண்டர் அடுப்பின் புகையின் காரணமாக வன்னிமர இலையில் பட்டு இலைகள் கருகி போவதை சுட்டிகாட்டி வன்னிமரத்தின் வீரியத்தன்மை குறைந்து வருகிறது என்றும்,வருங்காலத்தில் வன்னிமரத்திற்கு மிகப்பெரிய ஆபத்தை உண்டாக்க போகிறது என்றும், உடனடியாக வன்னிமரத்தடியில் பிரசாதம் செய்யும் இடத்தை மாற்றவேண்டும் என்றும்,புனிதமான பழமைவாய்ந்த வன்னிமரத்தை பாதுகாக்க வேண்டுமென்றும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக இந்துமக்கள்கட்சி சார்பில் திருக்கோவில் நிர்வாகத்திற்கு அடியேன் (சோலைகண்ணன் ) புகார் அளித்திருந்தேன்.
ஆனால் திருக்கோவில் நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக இருந்த காரணத்தால் இன்று (20-03-2026) அதிகாலை பெய்த மலையால் வன்னி மரம் முறிந்து சாய்ந்து விழுந்துள்ளதை கேட்டு பக்தர்கள் அனைவரும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்துள்ளனர்.
அன்றே அடியேன் கொடுத்த புகாரில் அடிப்படையில் சமையல் கூடத்தை வேற இடத்திற்கு மாற்றி இருந்தால் இன்று இந்த வன்னிமரம் முழுமையாக பாதுகாக்கப் பட்டிருக்கும்.
ஆகவே வரலாற்று சிறப்புமிக்க வன்னிமரத்தை அலட்சிய போக்கால் பாதுகாக்க தவறிய திருக்கோவில் நிர்வாகத்தை இந்த அறிக்கையின் மூலமாக இந்துமக்கள்கட்சி சார்பில் வன்மையான கண்டனத்தை பதிவு செய்தும்,இனிமேலாவது இருக்கின்ற வன்னிமரத்தை பாதுகாக்கின்ற வகையில் அருகில் இருக்கும் சமையல் கூடத்தை வேற இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென திருக்கோவில் நிர்வாகத்திற்கு பக்தர்கள் சார்பில் இந்துமக்கள்கட்சி இக்கோரிக்கை வைக்கிறது.




