• Mon. Sep 25th, 2023

அதிக மக்களால் பேசப்படுவதால் இந்தி தேசிய மொழியாக ஏற்க முடியாது- குமாரசாமி ட்வீட்

Byகாயத்ரி

Apr 29, 2022

முன்னாள் முதல்வர் குமாரசாமி இந்தி திணிப்பு குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-நடிகர் சுதீப், இந்தி தேசிய மொழி அல்ல என்று கூறியுள்ளார். இது சரியானது தான். இதில் எந்த தவறும் இல்லை. நடிகர் அஜய் தேவ்கான் இயற்கையாகவே மிகையாக செயல்படும் நபர். ஆனால் அவர் எப்போதும் கேலிக்குரிய வகையிலும் நடந்து கொள்கிறார். கன்னடம், தமிழ், மராட்டி போல் இந்தியும் ஒரு மொழி தான். இந்தியா பல்வேறு மொழிகளை கொண்ட நாடு. பல்வேறு பண்பாடுகளை கொண்ட மண்.இதற்கு யாரும் தொந்தரவு செய்ய கூடாது. அதிக மக்களால் பேசப்படுவதால் இந்தி தேசிய மொழியாக ஏற்க முடியாது. 9 மாநிலங்களை தவிர பிற மாநிலங்களில் இந்தி 2-வது, 3-வது மொழியாகவோ அல்லது அது கற்பிக்கப்படுவதோ இல்லை. நிலைமை இவ்வாறு இருக்க அஜய் தேவ்கான் கருத்தில் என்ன உண்மை உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *