• Sat. Sep 5th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

கிராமுக்கு உயர்ந்த தங்கத்தின் விலை…

Byகாயத்ரி

Dec 3, 2021

தென் இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழகம் முன்னிலையில் உள்ளது. மேலும் தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிகம்.மஞ்சள் உலோகமான தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. 2005ம் ஆண்டில் தங்கத்தின் விலை ஒரு கிராம் 600 ரூபாய்.தற்போது ஒரு கிராம் ரூ.4,500 வரை உயர்ந்துள்ளது.


கால் பவுன் தங்கமாவது வருடம் ஒருமுறை வாங்க வேண்டும் என்பதே இந்திய நடுத்தர குடும்பங்களின் சேமிப்பு திட்டம். தங்கம் இல்லாத இந்திய குடும்ப விசேஷங்கள் நிறைவு பெறாது.அப்படிப்பட்ட தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே செல்வது நடுத்தர மக்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 48 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.35,784-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 6 ரூபாய் உயர்ந்து, ரூ.4,473-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 65,000 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 300 ரூபாய் உயர்ந்து ரூ.65,300-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.65.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது.