• Wed. Sep 24th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

ராஜகண்ணப்பனுக்கு உயர்கல்வித்துறை ஒதுக்கீடு..!

Byவிஷா

Dec 21, 2023

தற்போது பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சராக இருக்கும் ராஜகண்ணப்பனுக்கு உயிர்கல்வித்துறை கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. இதற்கான பரிந்துரையை தற்போது முதலமைச்சர் கவர்னருக்கு வழங்கியிருக்கிறார்.
உயர்நீதிமன்ற தீர்ப்பை அடுத்து அமைச்சர் பொன்முடி பதவி தகுதி இழப்பு செய்யப்படுவதால், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் அமைச்சராக இருக்கக்கூடிய ராஜகண்ணப்பனுக்கு கூடுதல் பொறுப்பாக கொடுக்கப்படுகிறது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கக்கூடிய தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ராஜகண்ணப்பன். அவர் ஏற்கனவே போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். நடுவில் அவருக்கு பொறுப்பு மாற்றி அமைக்கப்பட்டது. தற்போது பிற்படுத்தப்பட்டதுறை அமைச்சராக இருக்கின்றார். உடனடியாகவே அமைச்சர் ராஜகண்ணப்பன் உயர்கல்வித்துறை அமைச்சர் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார். இன்றைக்கு தலைமைச் செயலகம் செல்வதற்கு வாய்ப்பு இருக்கிறது.
உயர் கல்வித் துறை என்பது கல்வித் துறை சார்ந்த பல்வேறு முடிவுகளை எடுக்க வேண்டும். மாணவர்கள் சார்ந்த நலன் இருக்கின்றன. அந்த அடிப்படையில் ராஜகண்ணப்பனுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. பொன்முடி வகித்த உயர்கல்வி மற்றும் அறிவியல் தொழில்நுட்பத் துறை ராஜகண்ணப்பன் கவனிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.