• Wed. Mar 4th, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

ஹெத்தை அம்மன் கோவில் திருவிழா-இன்று உள்ளூர் விடுமுறை

Byகாயத்ரி

Dec 22, 2021

ஹெத்தை அம்மன் கோவில் திருவிழாவையொட்டி நீலகிரி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் ஒவ்வொரு வருடமும் படுகர் இன மக்களால் ஹெத்தை அம்மன் கோவில் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவையொட்டி, மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவது வழக்கம்.

அந்த வகையில் இந்த வருடம் ஹெத்தை அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு இன்று டிச.22 நீலகிரி மாவட்ட பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில், வரும் ஜனவரி 8ஆம் தேதி அனைத்து அரசு அலுவலகங்களும் செயல்படும் என்று தெரிவித்துள்ளார்.