• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

சென்னையில் கடும் பனிப்பொழிவு

Byமதி

Dec 5, 2021

சென்னையில் இன்று கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. அதிகாலை நேரங்களில் பனியின் தாக்கம் மிகவும் அதிகமாக உள்ளது.

இதுதொடர்பாக வானிலை மைய தென் மண்டல இயக்குனர் பாலச்சந்திரனிடம் கேட்ட போது, ‘‘பொதுவாக டிசம்பர் மாதத்தில் பனிப்பொழிவு தொடங்கி விடும். சில நேரங்களில் தாமதமாகவோ, அல்லது முன்கூட்டியோ பனிப்பொழிவு இருக்கும். வடகிழக்கு பருவமழை வருகிற 31-ந் தேதி வரை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது. இருப்பினும் சென்னையில் மழை குறைந்து, பகலில் வெயில் அடிப்பதால் அதிகாலை பனிப்பொழிவு இருக்கிறது’’ என்று தெரிவித்தார்.

இதன் காரணமாக இருசக்கர வாகனங்களில் அதிகாலை நேரங்களில் வெளியில் செல்பவர்கள் திணறும் நிலை ஏற்பட்டுள்ளது.