• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் இடியுடன் கூடிய பலத்த மழை

நீலகிரி மாவட்டத்தில் பரவலாக பலத்த மழை பெய்து வருகின்றன மஞ்சூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் குளிருடன் மேகமூட்டம் நிலவி வந்தன. தொடர்ந்து பெய்து வந்த சாரல் மழைகளால் தேயிலை பறிக்க செல்பவர்களும் கட்டுமான வேலை செய்பவர்கள் விவசாயிகள் வேலையின்றி தவித்து வருகின்றனர்.

இரவு நேரங்களில் பலத்த இடியுடன் பலத்த மழை பெய்து வருகின்றன. மழை காரணமாக நிலச்சரிவோ, மரம் விழுவதோ ஏற்பட்டால் உடனடியாக வட்டாட்சியர் அலுவலகம் ,கீழ்குந்தா தேர்வு நிலை பேரூராட்சி, மஞ்சூர் காவல் நிலையத்திற்கு உடனடியாக தகவல் தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.