• Tue. Mar 10th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

காரைக்குடியில் இடியுடன் கூடிய பலத்த மழை

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த இடியுடன் கூடிய மழை பெய்தது.

காரைக்குடி ஸ்ரீராம் நகர் கோட்டையூர், பள்ளத்தூர், கண்டனூர், புதுவயல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த இடி மின்னலுடன் பெய்த மழையால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. கடந்த சில தினங்களாகவும், இன்று மதியம் ஒரு மணி வரையிலும் வெயில் அடித்து வந்த நிலையில், திடீரென வானிலை மாறி இடியுடன் கூடிய மழை பெய்ய தொடங்கியது. இதனால் காரைக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நிலவிய வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சீதோஷ்ன நிலை நிலவியது.