• Thu. Mar 19th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

இன்றும் தமிழகத்தில் கனமழை பெய்யும்- வானிலை ஆய்வு மையம்

ByA.Tamilselvan

Nov 13, 2022

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ள நிலையில் இன்றும் தமிழகத்தில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது. இந்நிலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று வலுவிழந்ததை அடுத்து, தமிழகத்தில் இன்று கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், அடுத்த இரண்டு நாட்களுக்கு மழையின் தீவிரம் குறையும். இதனால், நாளை மற்றும் நாளை மறுநாள் ஒரு சில இடங்களில் மிதமான மழை மட்டுமே பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதேபோல வரும் 16ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.