• Wed. Jan 14th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

கேரளாவில் மீண்டும் அதிகனமழை எச்சரிக்கை

Byமதி

Oct 22, 2021

கேரளாவில் கடந்த ஆண்டை விட மழையின் தீவிரம் அதிகமாக உள்ளது. கடந்த அக்டோபர் 16ம் தேதி கொட்டித் தீர்த்த கனமழையால் நிலச்சரிவிலும், மழை வெள்ளத்தாலும் இதுவரை 42 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், இடுக்கி, பத்தனம்திட்டா, கோட்டயம் மற்றும் திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் ஆகிய எட்டு மாவட்டங்களுக்கு அடுத்த 24 மணி நேரத்திற்கு அதி கன மழைக்கான ‘ஆரஞ்ச் அலர்ட்’ எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் இந்த எட்டு மாவட்ட நிர்வாகங்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளன இரவு நேர வாகன போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

காசர்கோடு நீங்கலாக இதர மாவட்டங்களுக்கு கன மழைக்கான ‘மஞ்சள் அலர்ட்’ எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 25ம் தேதி வரை மாநிலம் முழுக்க பரவலாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.