• Sat. Mar 7th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

தமிழகத்தில் கனமழை – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

Byமதி

Nov 3, 2021

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 17 மாவட்டங்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன்படி, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நாமக்கல், கரூர், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளது.

விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, தேனி, தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டங்கள், காரைக்கால் மற்றும் புதுச்சேரியில் அடுத்த இரண்டு மணி நேரம் வரை கனமழை இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.