• Tue. Jul 21st, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

கனமழை: எந்தெந்த மாவட்டங்களில்
இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?

கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. அந்த வகையில், வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இன்று இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்தது.
இதனிடையே, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்:-
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, வேலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, பெரம்பலூர்,
விழுப்புரம், அரியலூர், கடலூர், புதுக்கோட்டை, திருவண்ணாமலை, சேலம், ராமநாதபுரம், கள்ளக்குறிச்சி, திருச்சி, மதுரை, தேனி, கரூர்.
பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்:-
சிவகங்கை, நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், திருப்பத்தூர் மாவட்டத்தில் 8 – ம் வகுப்பு வரையிலான பள்ளிகளுக்கு விடுமுறை. புதுச்சேரி, காரைக்காலிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும், நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.