• Thu. Apr 9th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!..

Byமதி

Oct 12, 2021

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், வருகிற 16ஆம் தேதி வரை கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

நாளை உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆந்திரா, ஒடிஷா இடையே கடற்கரையை நோக்கி நகரும் என்றும்,தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு மிக கனமழை பெய்யக் கூடும் என்றும் அறிவித்துள்ளது.

அதேபோல், நீலகிரி, கோவை, மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், திருப்பத்தூர், கன்னியாகுமரி, திருவண்ணாமலை, புதுக்கோட்டை திண்டுக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, காரைக்கால் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடல் கேரளா மற்றும் லட்சத்தீவு பகுதிகளுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கையும் விடுத்துள்ளது.