• Wed. Mar 18th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

நிலக்கோட்டையில் ஒரு மணி நேரம் பலத்த மழை..,

ByPuthar Pandian P

Mar 18, 2026

வத்தலக்குண்டு நிலக்கோட்டை, கொடை ரோடு, பட்டிவீரன்பட்டி, அய்யம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமப் பகுதிகளில் இன்று காலை முதல் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் தற்போது மதியம் 2மணி முதல் பலத்த மழை பெய்து வருகிறது.

வத்தலக்குண்டு, நிலக்கோட்டை, அம்மையநாயக்கனூர் ,கொடைரோடு, பட்டி வீரன்பட்டி, கணவாய் பட்டி, விருவீடு, அய்யம்பாளையம் உள்ளிட்ட இதனை சுற்றியுள்ள 20 க்கும் மேற்பட்ட கிராமங்களில், இடி மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

சாலைகளில் இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்வோர் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். கடந்த சில நாட்களாக கடுமையாக வெயில் வாட்டி வந்த நிலையில் தற்போது மழை பெய்து வருவதால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

நிலக்கோட்டை அடுத்த விளாம்பட்டி முத்தலாபுரம் பகுதியில் ஆலங்கட்டி மழை பெய்தது

தற்போது ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்து வரும் கனமழையால் உழவுக்கு பயன் தரக்கூடிய மழையாகவும், குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்கும் மழையாகவும் இருப்பதாக பொது மக்கள், மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.