குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக ஏராளமான ஏக்கர் நெல் பயிர்கள் மற்றும் வாழைத் தோட்டங்கள் நீரில் மூழ்கின. இதேபோல் தாழ்வான பகுதிகளில் வசித்து வரும் மக்கள் கடும் அளவில் பாதிக்கப்பட்டு, முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.
பல்வேறு இடங்களில் மின் கம்பங்கள் உடைந்தும், மின்சார கோபுரங்கள் சாய்ந்தும் காணப்படுகிறது.

இதனிடையே, தமிழ்நாடு மின்சாரம் மதுவிலக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் அமைச்சர் மனோதங்கராஜ் தலைமையில் குமரி மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட பார்த்திபபுரம் பகுதியில் கனமழையால் பாதிக்கபட்ட மின்மாற்றினை போர்கால அடிப்படையில் சரிசெய்து நேரில் பார்வையிட்டார்.