• Sun. Mar 26th, 2023

கவுன்சிலர் கூட்டத்தில் திமுக,அதிமுகவினர் இடையே கடும் வாக்குவாதம்!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் தலைவர் லதா அண்ணாதுரை தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ராஜகம்பீரம் பகுதியைச் சேர்ந்த 7-ஆவது வார்டு ஒன்றியக் கவுன்சிலர் ருக்மணி, தனது வீட்டிற்கு குடிநீர் குழாய் இணைப்பு தரவில்லை என்று சென்றமுறை நடைபெற்ற கவுன்சிலர் கூட்டத்தில் புகார் தெறிவித்திருந்த நிலையில், மூன்று மாதம் ஆகியும் இன்று வரை இணைப்பு தரவில்லை என்று தெரிவித்தார்! மேலும், குடிநீர் இணைப்புக்காக ஊராட்சி மன்ற தலைவர் தன்னிடம் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்பதாகவும் குற்றம் சாட்டினார்!

இதற்கு பதிலளிக்கும் விதமாக திமுக கவுன்சிலர் அண்ணாதுரை, பேப்பரில் எழுதிக் கொண்டு வந்தால் புகாராக எடுத்துக் கொள்ள மாட்டாது சரியான ஆதாரம் வேண்டும் என்றார்! இதனால் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது!

ஒரு கட்டத்தில், இருவரும் எதிர் எதிர் காட்சிகள் குறித்து ஆவேசமாக பேச தொடங்க, வாக்குவாதம் முற்றியது!

“உங்க திமுக ஆட்சிக்கு வந்துட்டா, என்ன வேண்டுமானாலும் செய்யலாம்- னு நினைக்காதீங்க! எங்களுக்கும் ஒரு காலம் வரும்” என்று ருக்மணி சொல்ல!

இதற்கு பதில் கூறிய திமுக கவுன்சிலர் அண்ணாத்துரை, “எங்க ஆட்சி வந்த 8 மாசத்திலேயே உங்கனால பொருத்துக்க முடியல! உங்களுக்கு காலம் வரப்போ பாத்துக்கோங்க!” என்றார்!

இப்படியாக வாக்குவாதம் முற்றி, ருக்மணி, பஞ்சவர்ணம் இருவரும் வெளிநடப்பு செய்ய, கவுன்சிலர் கூட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *