மதுரை மாவட்டம் சோழவந்தான் அரசு மருத்துவமனை முன்பு பேரூராட்சி சார்பில் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது பேரூராட்சி தலைவர் எஸ் எஸ் கே ஜெயராமன் ஆலோசனையின் பேரில் செயல் அலுவலர் செல்வகுமார் மேற்பார்வையில் துப்புரவு மேற்பார்வையாளர் ராமு மற்றும் பணியாளர்கள் தூய்மை பணியினை மேற்கொண்டனர்.

மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் மற்றும் உடன் வரும் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரின் ஆரோக்கியத்தை காக்கும் பொருட்டு தொற்றுநோய் பரவாமல் இருக்க மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டது.