• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இடமாற்றம்

ByA.Tamilselvan

Jun 12, 2022

தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பலர்துறைரீதியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதன்படி, சுகாதாரத்துறை செயலாளர் பதவியில் இருந்து ராதாகிருஷ்ணன் கூட்டுறவு, உணவு நுகர்வோர் பாதுகாப்புத்றை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனால், தமிழக சுகாதாரத் துறையின் புதிய செயலாளராக செந்தில்குமார் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், உள்துறை செயலாளராக இருந்த எஸ்.கே.பிரபாகர் மாற்றப்பட்டு பணீந்திர ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார். நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள்துறை முதன்மைச் செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். வணிகவரித்துறை முதன்மைச் செயலாளராக தீரஜ்குமர் நியமிக்கப்பட்டுள்ளார். வருவய் நிர்வாக ஆணையராக அல்லது கூடுதல் தலைமைச் செயலாளராக எஸ்.கே.பிரபாகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அதிமுக ஆட்சிகாலத்திலும் தற்போதை திமுக அரசிலும் சுகாதாரத்துறை செயலாளராக நீண்டகாலம் பணியாற்றியவர்.கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் மிகச்சிறப்பாக செயல்பட்டவர் ராதாகிருஷ்ணன்.