• Sun. Mar 22nd, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

மருத்துவர்களுக்கு சுகாதாரத்துறையின் அதிரடி உத்தரவு

Byவிஷா

Feb 23, 2024

மருத்துவர்கள் இனி மருந்துச் சீட்டுகளில் கேப்டல் எழுத்துகளில்தான் புரியும்படி எழுத வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
மருத்துவர்கள் நோயாளிகளுக்கு எழுதிக் கொடுக்கும் மருந்துச்சீட்டில் இருக்கும் எழுத்துக்கள் புரியாத வகையில் இருப்பதாக பல காலமாக கருத்து நிலவி வருகிறது. இந்த நிலையில் நோயாளிகளுக்கு புரியும் வகையில் மருந்துகளின் பெயர்களை எழுதித் தர வேண்டும் என்று மத்திய அரசு அண்மையில் அறிவுறுத்தியிருந்தது. இதையடுத்து இது தொடர்பான உத்தரவை தமிழ்நாட்டில் உள்ள மருத்துவமனைகள் பின்பற்ற வேண்டும் என தமிழக அரசு தற்போது உத்தரவிட்டுள்ளது.
அதன்படி மருத்துவர்கள் நோயாளிகளுக்குப் பரிந்துரைக்கும் மருந்துச்சீட்டில் அவர்களுக்கு புரியும் வகையில் கேப்டல் எழுத்தில் எழுத வேண்டும் என மருத்துவம் மற்றும் ஊரக பணி இயக்கம் உத்தரவிட்டுள்ளது, இந்த விஷயத்தை கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.