• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

ஹவாலா பணமா ? கைது செய்து விசாரணை !!!

BySeenu

Jul 15, 2025

கோவை, பாலக்காடு அருகே பேருந்தில் ஆவணங்கள் இன்றி கடத்தி வந்த 48 லட்சம் ரூபாய் ஹவாலா பணமா ? என ஒருவரை கலால் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேரளா மாநிலம், பாலக்காடு மாவட்டம் வாளையார், கோவை – கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஆய்வாளர் பிரசாந்தின் தலைமைதான காவல் துறையினர் நேற்று இரவு வாகன சோதனை நடத்தினர்.

அப்பொழுது கோவை பகுதியில் இருந்து கொச்சி நோக்கி சென்று கொண்டு இருந்த தனியார் பேருந்து தடுத்து நிறுத்தி பயணிகளிடம் நடத்திய சோதனையில் மகாராஷ்டிரா மாநிலம் சங்கிலி தாலுகா கிலேமசித்ரகட் பகுதியைச் சேர்ந்த கணேஷ் அசோக் யாதவ் என்பவரின் பையில் 500 ரூபாய் 96 நோட்டுகள் கட்டுகளாக எந்தவித ஆவணமும் இன்றி 48 லட்சம் ரூபாய் மறைத்து வைத்து இருப்பதை கண்டுபிடித்தனர். இதை அடுத்து அவரை கைது செய்து நடத்திய விசாரணையில் பணத்தை பெங்களூரில் இருந்து கொட்டாரக்கரை பகுதிக்கு கடத்திச் செல்லும் போது சிக்கியது தெரியவந்தது. பறிமுதல் செய்த பணத்துடன் கைது செய்யப்பட்ட கணேஷ் அசோக் யாதாவை காலால் துறையினால் தொடர் விசாரணை விசாரணைக்காக வருமான வரி துறையினரிடம் ஒப்படைத்து உள்ளனர்.