• Sat. Apr 20th, 2024

அதிபர் மகிந்த ராஜபக்ஷே பதவி விலகினாரா…?? கலவரமாய் மாறியிருக்கும் இலங்கை..

Byகாயத்ரி

May 9, 2022

இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. ராஜபக்சே குடும்பத்தினர் தவறான முடிவுகளே இந்த நிலைக்கு காரணம் என கூறி எதிர்க்கட்சியினரும், பொதுமக்களும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிபர் கோத்தபய ராஜபக்சேவும், பிரதமர் மகிந்த ராஜபக்சேவும் பதவி விலகக்கோரி ஒரு மாதமாக தெருமுனை போராட்டங்கள் நடந்து வருகின்றன.

போராட்டம் தீவிரமடைந்த நிலையில் இலங்கையில் நெருக்கடி நிலையை அதிபர் கோத்தபய ராஜபக்சே பிறப்பித்தார். இதனால் போராட்டக்காரர்களை பாதுகாப்பு படையினர் ஒடுக்கும் நடவடிக்கையில் இறங்கினர். எனினும் மக்கள் போராட்டம் ஆங்காங்கே தீவிரமாக நடைபெறுகிறது. அரசியல் குழப்பத்துக்கு முடிவு கட்ட பிரதமர் பதவியில் இருந்து விலக மகிந்த ராஜபக்சே முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. மக்களுக்காக எந்த தியாகத்தையும் செய்ய தயார் என்று மகிந்த கூறி உள்ளார். இந்நிலையில், கொழும்புவில் உள்ள பிரதமர் மகிந்த ராஜபக்சே வீட்டின் முன்பு இன்று ஏராளமானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்று முழக்கங்கள் எழுப்பினர். இதேபோல் பிரதமரின் ஆதரவாளர்களும் நூற்றுக்கணக்கானோர் அங்கு திரண்டு, பிரதமர் பதவி விலக வேண்டாம் என்று கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மகிந்தவின் ஆதரவாளர்களுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் போராட்டக்காரர்களை மகிந்த ஆதரவாளர்கள் தாக்கினர். இதில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசாவையும் தாக்க முயன்றதால் பெரும் பதற்றம் உருவானது. போலீசார், மகிந்த ஆதரவாளர்களின் மீது தண்ணீரை பீய்ச்சியடித்து கலைத்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அசம்பாவிதம் நடக்காமல் தடுக்கும் வகையில், நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கொழும்பில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மோதல் நடந்த பகுதியில் போலீசாருடன், ராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பதற்றம் நீடிக்கிறது.

இந்நிலையில் தற்போது இலங்கை பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக அதிபர் மகிந்த ராஜபக்ஷே தெரிவித்துள்ளார். மக்களின் நன்மைக்காக எந்த தியாகத்தை வேண்டுமானாலும் செய்ய தயாராக இருப்பதாக அவர் ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில், தற்போது அவர் பதவி விலகியதாக உள்ளூர் பத்திரிகையில் தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *