• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

மாலத்தீவுக்கு சென்றுவிட்டதா அதிபர் கோத்தாபய ராஜபக்சே குடும்பம்…

Byகாயத்ரி

Jul 13, 2022

இலங்கையில் அதிபர் கோத்தாபய ராஜபக்சேவுக்கு எதிராக போராட்டம் வெடித்துள்ள நிலையில் அவர் மாலத்தீவில் பதுங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. இதனால் போராட்டக்காரர்கள் இலங்கை அதிபர் மாளிகையை சூறையாடிய நிலையில், அங்கிருந்து தப்பிய அதிபர் கோத்தாபய ராஜபக்சே தலைமறைவானார். அவர் இலங்கையிலிருந்து தப்பி சென்றுவிட்டதாக தகவல்கள் வெளியான நிலையில், அவர் இலங்கையில்தான் இருப்பதாக அந்நாட்டு சபாநாயகர் கூறியிருந்தார். இந்நிலையில் இலங்கையிலிருந்து தப்பிய கோத்தாபய குடும்பத்துடன் மாலத்தீவுக்கு தப்பி சென்று விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் முன்னதாக அவரது அதிபர் பதவியையும் அவர் ராஜினாமா செய்துள்ளார்.