• Tue. Mar 3rd, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

இஸ்லாமிய சகோதரர்கள் அனைவருக்கும் இனிய ரம்ஜான் வாழ்த்துக்கள் எம்.பி.விஜய் வசந்த்..,

ஒரு மாதம் நோன்பிருந்து, பசியின் துன்பத்தை அறிந்து இன்று ரம்ஜான் பண்டிகையை கொண்டாடும் இஸ்லாமிய சொந்தங்கள் அனைவருக்கும் இனிய ரம்ஜான் நல்வாழ்த்துக்கள்

அனைவரிடத்திலும் அன்பை காட்டி, ஏழை எளியோருக்கு உதவிகள் புரிந்து அனைவரும் சகோதரத்துவத்துடன் சமூகத்தில் வாழ்ந்திட இந்நாளில் பிரார்த்திக்கிறேன். நபிகள் நாயகம் கற்பித்த ஈகையும் இரக்கமும் தழைத்தோங்க வேண்டுகிறேன். அவர் வழிகாட்டிய எளிமை, அன்பு அடக்கம் ஆகியவை சமூகத்தில் நிரம்பி வழியட்டும்.
உலகிற்கே உத்தம பண்பை போதித்த நபிகள் வழியை பின்பற்றி, நோன்பை கடை பிடித்து நீங்கள் மகிழும் இந்த நாளில் உங்கள் அனைவரது வாழ்விலும் நலமும், வளமும் பெறுக வாழ்த்துகிறேன்.

இஸ்லாமிய மக்களுடன் சேர்ந்து அனைத்து மக்களும் ஒன்றிணைந்து கொண்டாடும் இந்நாள் சமூக அமைதிக்கு ஒரு எடுத்துகாட்டு. இத்தகைய பண்டிகைகள் மக்கள் மத்தியில் ஒற்றுமை மற்றும் சகோதரத்துவம் உறுதிபட காரணமாக அமையட்டும்.
ஒரு வீட்டு பிள்ளைகளாக வாழ்ந்து வரும் நம்மை பிரிக்க சதி செய்பவர்களை கண்டறிவோம்.

நமது சமூகத்தில் நிலவி வரும் ஒற்றுமையை சீர்குலைக்கும் முயற்சிகளை நாம் ஒன்றிணைந்து முறியடிப்போம். உங்கள் உரிமைகளை காக்கவும், நலனை போற்றவும் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் நானும், காங்கிரஸ் கட்சியும் என்றும் குரல் கொடுப்போம் என இந்நாளில் உறுதி அளிக்கிறேன்.

உங்கள் அனைவரது இல்லங்களில் மகிழ்ச்சி பொங்கட்டும். உங்கள் மனங்களில் அமைதி பெருகட்டும். இனிய ரம்ஜான் நல்வாழ்த்துக்கள்.