ரஜினி இன்று தனது 72-வது பிறந்தநாளை வழக்கம் போல தனது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களுடன் இன்று காலை பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு பல்வேறு கட்சி தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்
பிரதமர் மோடி ரஜினிக்கு தனது டுவிட்டர் பதிவி ன் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“ரஜினிகாந்துக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். அவர் தனது படைப்பாற்றல் மற்றும் அற்புதமான நடிப்பால் மக்களை தொடர்ந்து ஊக்கப்படுத்த வேண்டும். நல்ல உடல் நலத்துடன் நீண்ட நாள் ரஜினிகாந்த் வாழ கடவுள் ஆசீர்வதிக்கட்டும்”
என அவர் டிவிட் செய்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது பிறந்தநாள் வாழ்த்து செய்தியில் ‘‘உள்ளார்ந்த அன்புடன் பழகிடும் இனிய நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்குப் பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
72-ஆவது அகவையில் அடியெடுத்து வைக்கும் அவர், இன்னும் பல ஆண்டுகள் தமிழ் மக்களைத் தன்னிகரற்ற தனது திரையாளுமையால் மகிழ்விக்கவும்; நல்ல உடல்நலத்துடன் திகழவும் விழைகிறேன்.’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.