• Mon. Mar 27th, 2023

ஆன்டி இண்டியன் படம் எப்படி இருக்கு ? கொஞ்சம் வித்தியாசமா பார்க்கலாம்

ஆன்டி இண்டியன் திரைப்படம் டிச.10 ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.படம் வெளியாவதற்கு பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி, பட தணிக்கையிலும் கடும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது. மேலும் சிறப்பு காட்சிகளை பார்த்த பிரபலங்கள் பலரும் புகழ்ந்து தள்ளியுள்ளனர்.


சரி வாங்க அப்படி படத்தில் என்ன இருக்கிறது என்று பார்க்கலாம். இந்த படத்தின் இயக்குனர் குறித்து பலருக்கும் அறிமுகம் தேவை இல்லை. ஒரு படம் ரிலீஸ் ஆன உடனே இவரு ரிவ்யூ எப்போ வரும் என்று பலரும் வயிற்றில் புளியை கரைத்து கொண்டிருப்பார்கள்.பில்டப் தேவை இல்ல, Youtube Reviewer இளமாறன், உங்களுக்கு தெரியாது. ப்ளூசட்ட மாறன் என்றால் அனைவருக்கும் பரீட்சியம்.
நீ எத்தன படத்த கொறசொல்லிருப்ப , நீ படம் எடுத்து பாரு அப்போ தெரியும் கஷ்டம்ன்னு பலரும் கேட்டதற்கு ஏற்றார்போல் இந்த படத்தை மிகுந்த சிரமத்திற்கு இடையே தான் இயக்கி வெளியிட்டுள்ளார்.


முதலில் கதை குறித்து பார்க்கலாம் மயிலாப்பூர் இடைதேர்தல் வருகிறது. யார் வெற்றி பெறுவது என்று ஆளும் கட்சி ,எதிர் கட்சி என போட்டிப்போட்டுகொண்டிருக்கின்றனர். இன்னொரு பக்கம் சுவர் ஓவியம் வரையும் பாட்ஷா என்ற ஒரு நபர் கொல்லப்படுகிறார்.அந்த கொலை குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.


பாட்ஷா உடல் பிரேதபரிசோதனை முடிந்த பிறகு அவரது வீட்டுக்குஎடுத்து செல்லப்பட்டு, அவர் இஸ்லாமியர் என்பதால் இஸ்லாமிய முறைப்படி சடங்குகள் செய்யபட்டு உடல் புதைப்பதற்காக எடுத்துச் செல்லப்படுகிறது.


இங்கு தான் முதல் பிரச்சனை ஆரம்பிக்கிறது.பாட்ஷா முறையா முஸ்லிமா வளரவில்லை என்று காரணம் காட்டி புதைக்க முடியாது என்று பாட்ஷா உடலை கொண்டு போக சொல்கிறார்கள். அப்போது அங்கிருந்த ஒரு இந்து கட்சியை சேர்ந்த நபர் நாங்கள் எங்க கட்சி சார்பாக உடலை புதைகிறோம் என்று கூறி மீண்டும் உடலை வீட்டுக்கு கொண்டு செல்கின்றனர். மீண்டும் ஒரு முறை இந்து முறைப்படி சடங்குகள் செய்து இந்து கட்சியை சேர்ந்த தலைவர் வந்து அவரது தலைமையில் உடலானது சுடுகாட்டிற்கு எடுத்து செல்லப்படுகிறது.


பாட்ஷா உடல் சுடுகாட்டிற்குகொண்டு செல்லும் போது அங்குள்ள அதிகாரி பாட்ஷாவுடைய அனைத்து ஆவணங்களின் படி அவரு இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர்.அவரது உடலை இங்கு புதைக்க முடியாது என்று கூறி தகராறு வர இந்து கட்சியை சேர்ந்தவர் நீதிமன்றத்துல பெட்டிசன் போட்டு 11 மணிக்கு கோர்ட் ஆர்டர் வாங்கி அடக்கம் செய்து கொள்ளலாம்னு பேசிட்டு இருக்கும் போது, இந்த தகவல் அங்குள்ளசர்ச் பாதிரியாரிடம் செல்கிறது.

அவரோ பாட்ஷா உயிரோடு இல்ல , அவரோட அப்பாவும் உயிரோடு இல்ல.இப்போதைக்கு உயிரோடு இருக்கிறது பாட்ஷாவோட அம்மா சரோஜா என்ற லூர்து மேரி அவங்க சம்மதம் சொன்னா நாங்களே செலவு செய்கிறோம்னு சொல்லும் போது பிரச்சனை இன்னும் பெருசா வெடிக்கிறது. இதில் யாருக்கு பக்கம் என்ன பண்றதுன்னு தெரியாம ஆள் ஆளுக்கு பாட்ஷாவோட உடலை சொந்தம் கொண்டாடுறாங்க.


இன்னொரு பக்கம் இடைத்தேர்தலில் எப்படியாவது ஜெயிக்க வேண்டுமென்று ஆளும் கட்சி போட்டி போடும் போது ,எதிர் கட்சி தான் ஜெயிக்கும் என்று ஆளும் கட்சி முதல்வருக்கு உளவுத்துறை கூறுகிறது. மேலும் ஆளும் கட்சி ஜெயிக்க ஒரு திரைபிரபலத்தின் ஆதரவை வேண்டி காத்திருக்கிறது. அப்போது ஆதரவு கிடைத்தால் சரி , ஆதரவு கிடைக்கவில்லை என்றால் என்ன செய்யலாம் என்று முதல்வர் தலைமையில் ஆலோசனை நடக்கும் போது, பாட்ஷா உடல் வைத்து நடக்கும் மத பிரச்சனையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கலவரத்தை உண்டாக்கி தேர்தலை ரத்துசெய்து விடலாம் என்று திட்டம் தீட்டுகின்றனர்.


அதன் பிறகு தேர்தல் நடந்ததா ? பாட்ஷா உடல் புதைக்கப்பட்டதா என்பது மீதி கதை.
மற்ற படங்களில் உள்ளது போல அரசியல் குறியீடு இந்த படத்திலும் உள்ளது. இந்த படத்தில் முதல்வராக நடித்துள்ள ராதாரவி முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை அப்படியே பிரதிபலித்துள்ளார். மேலும் இந்த கலவரம் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை பிரதிபலிக்கும் விதமாக 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதை நினைவு கூறும் விதமாக உள்ளது.மேலும் எதிர் கட்சியினா கமுக என்று கட்சி நடத்தும் செயல்வீரர்கள் கூட்டம் திமுகவை குறிக்கிறது. இந்து கட்சியை சேர்ந்த நபர் ராஜா.விளக்க தேவையில்லை ஹெச்.ராஜாவை தான் தான் குறிக்கிறது.
மேலும் வாட்ஸ்சப்பில் வலம் வசனங்களை படத்தில் ஆங்காங்கே காணமுடிகிறது.

மிகுந்த சர்ச்சை ,இடர்பாடுகளுக்கு நடுவே வெளியான திரைபடத்தை பலரும் கொண்டாடி வருகின்றனர்.சிலர் இதை தங்களது மதத்தை துன்புறுத்துவதாக புகார்களையும் எதிர்ப்புகளையும் சமூகவளைதலங்களில் பரப்பி படத்தின் புரோமோஷன் வேலைகளையும் செய்து வருகின்றனர்.
மொத்தத்தில் ஆன்டி இண்டியன் மெதுவாக ஆரம்பித்து டாப் கியரில் சென்று டக்கென்று நிறுத்தியது போல அதுக்குள்ள படம் முடிந்துவிட்டதா என்று நினைக்கும் எண்ணத்தில் படத்தை உருவாக்கி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *