• Sun. Sep 14th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

மத்திய பிரதேசத்தில் பாதி ; ராஜஸ்தானில் பாதி…! வினோத ரயில் நிலையம்

மும்பை ரயில் பாதையில் ஒரு வினோதமான நிலையம் உள்ளது. இந்த ரயில்வே நிலையத்தில் ரயில் நிற்கும் போது, ரயிலின் இன்ஜின் உடன் இணைந்த ஒரு பாதி ஒரு மாநிலத்திலும் ரயிலின் மறு பாதி மற்றொரு மாநிலத்திலும் நிற்கிறது என்றால் ஆச்சர்யமாக உள்ளது இல்லையா.
இந்த நிலையம் மத்திய பிரதேசத்தின் ஜலாவார் மாவட்டம் மற்றும் ராஜஸ்தானின் கோட்டா பிரிவில் வருகிறது. ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசத்திற்கு இடையில் உள்ள பவானி மண்டி ரயில் நிலையம் தான் அந்த ரயில் நிலையம்.

இந்த ரயில் நிலையத்தின் முன்பதிவு கவுன்டர் மத்தியப் பிரதேசத்தின் மந்த்சூர் மாவட்டத்தில் உள்ளது. ரயில் நிலையத்திற்குள் நுழையும் வழி ராஜஸ்தானின் ஜலாவர் மாவட்டத்தில் உள்ளது. இங்கே டிக்கெட் வாங்க க்யூவில் நிற்கும் போது மத்தியப் பிரதேசத்திலிருந்து தொடங்கி, ராஜஸ்தான் வரை க்யூ நீளும். இங்குள்ள நிர்வாக அமைப்பும் மிகவும் வேடிக்கையாக உள்ளது. ரயில்வே ஸ்டேஷனில் ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால், அந்த மாநில போலீசார்தான் அந்த விஷயத்தை கண்காணிக்கின்றனர்.

இங்கு நடைமேடையில் அருகில் டிக்கெட் எடுக்கும் பயணிகள் ராஜஸ்தானில் நின்று கொண்டிருந்தால், டிக்கெட் கொடுப்பவர் மத்தியப் பிரதேசத்தில் அமர்ந்திருப்பார். மத்தியப் பிரதேசத்தின் பைன்சோடாமண்டி நகரில் பவானி மண்டி நகரின் புறநகரில் அமைந்துள்ள வீடுகளின் முன் கதவுகள் ஒரு மாநிலத்திலும் பின் கதவுகள் வேறொரு மாநிலத்திலும் உள்ளது
இந்த பவானி மண்டி ரயில் நிலையம் ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசத்தின் எல்லையில் அமைந்துள்ளதால் பல வழிகளில் சிறப்பு வாய்ந்தது.
பவானி மண்டி ரயில் நிலையத்திற்கு வரும் அனைத்து ரயில்களும் ஒரே நேரத்தில் இரண்டு மாநிலங்களில் நிற்கின்றன. பவானி மண்டி நகரின் புறநகரில் அமைந்துள்ள வீடுகளின் முன் கதவுகள், மத்தியப் பிரதேசத்தின் பைன்சோதமண்டி நகரத்தில் திறக்கப்படுகின்றன, அவற்றின் பின் கதவுகள் ஜலாவாரின் பவானி மண்டியில் திறக்கப்படுகின்றன.

பவானி மண்டி நகரம் ஜலாவார் எல்லையில் இருப்பதால் போதைப்பொருள் கடத்தலுக்கு பெயர் போனது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் விற்பனையாளர்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் பெரும்பாலும் இங்குள்ள புவியியல் நிலையை பயன்படுத்திக் கொள்கிறார்கள், அதாவது, மத்தியப் பிரதேசத்தில் குற்றத்தைச் செய்து விட்டு, ராஜஸ்தானுக்கு தப்பிச் செல்கிறார்கள். ராஜஸ்தானில் குற்றங்களைச் செய்தபின் மத்தியப் பிரதேசம் நோக்கி தப்பித்து ஓடுகிறார்கள். எனினும், இதன் காரணமாக இரு மாநில போலீசாருக்கும் இடையே அடிக்கடி எல்லை தகராறு ஏற்படுகிறது.

இதை அடிப்படையாக கொண்டு 2018 ஆம் ஆண்டில், ஒரு பாலிவுட் நகைச்சுவைத் திரைப்படமும் உருவாக்கப்பட்டது. அதன் பெயர் ‘பவானி மண்டி தேசன்’.