தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவின்படி டெல்லியில் 10 மற்றும் 15 ஆண்டுகளுக்கு பழமையான டீசல் மற்றும் பெட்ரோல் வாகனங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
காற்று மாசுக்கு எதிராக போராடும் வகையில் டெல்லி அரசு அரசாங்கத்தின் பல்வேறு துறைகள் மற்றும் தன்னார்வ அமைப்புகளில் உள்ள பழைய பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களை ரத்து செய்துவிட்டு அதற்குப் பதிலாக எலக்ட்ரிக் வாகனங்களை வாங்கியுள்ளது.மந்திரிகள் மற்றும் உயர் அதிகாரிகள் பயன்படுத்துவதற்காக 12 எலக்ட்ரிக் வாகனங்களை பொது நிர்வாகத்துறை தற்போது வாங்கியுள்ளது.
இதுபற்றி டெல்லி அரசாங்கத்தின் மூத்த அதிகாரி கூறுகையில் “பத்து முதல் பதினைந்து ஆண்டுகளுக்கு பழமையான டீசல் மற்றும் பெட்ரோல் வாகனங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அத்தகைய வாகனங்களை அடையாளம் கண்டு ஸ்கிராப்பிங்கிற்கு இருப்பதற்காக செயல்முறையும் ஆரம்பித்துள்ளோம்.