இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷை பென்சில் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகப்படுத்திய இயக்குநர் மணி நாகராஜ் மாரடைப்பால் காலமானார். இவர் இயக்குனர் கௌதம் மேனனிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர். இவரது திடீர் மறைவு திரைத்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இவரது மறைவுக்கு பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.