135 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவை மாவட்டம் சின்னவேடம்பட்டி பகுதியில் உள்ள கெளமார மடாலயத்தை நிறுவிய இராமானந்த சுவாமிகளின் 69-வது ஆண்டு குருபூஜை விழா,தண்டபாணி சுவாமிகளின் நூல்கள் வெளியீட்டு விழா,கல்வி,இசை, சமூக சேவைகளின் சாதனை படைத்தவர்களுக்கு விருது வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா கெளமார மடாலயத்தில் உள்ள கலையரங்கில் நடைபெற்றது.இந்த முப்பெரும் விழாவை ராமானந்த குமரகுருபர சுவாமிகள் தலைமை தாங்கினார்.

தொடர்ந்து சமூக சேவையில் சாதனை படைத்த அண்ணா பல்கலைக்கழகம் முன்னாள் துணைவேந்தர் டாக்டர் பாலகுருசாமி,ஐ.நா சபை சிறப்பு தூதர் ராஜா பி ஆறுமுகம் உள்ளிட்ட பலருக்கு விருதுகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் இராமானந்த குமரகுருபர சுவாமிகள் பேசுகையில்:-
135 ஆண்டுகளுக்கு முன்பு இராமானந்தா சுவாமிகளால் தொடங்கப்பட்ட இந்த கௌமார மடாலயம் கொல்லாமை,புலால் உண்ணாமை,இறையன்பு,அறவொழுக்கம் ஆகிய நெறிகளை உலகம் முழுவதும் பரவ செய்ய வேண்டுமென்று உயர்ந்த நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது.

அதனைத் தொடர்ந்து ரத யாத்திரை நடைபெற்றது.ரத யாத்திரை சின்னவேடம்பட்டி,சரவணம்பட்டி, சிவனந்தபுரம் ஆகிய பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட கோவில்களுக்கு சென்று கொண்டு செல்லப்பட்டது.




