• Wed. Sep 11th, 2024

குரூப் 4 தேர்வு தேதி அறவிப்பு…

Byகாயத்ரி

Mar 30, 2022

தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) கீழ் தமிழக அரசுப் பணிகள் பெரும்பாலானவற்றுக்கு தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

அதன்படி, குரூப் -1 பிரிவில் தமிழக அரசின் உச்ச அதிகாரப் பணிகளான துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. அதேபோல், குரூப் -2 பிரிவில் சிறைத்துறை நன்னடத்தை அலுவலர், உதவி தொழிலாளர் அலுவலர், சார் பதிவாளர், லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு உதவியாளர், புலனாய்வு பிரிவு சிறப்பு உதவியாளர், குற்றப்பிரிவு சிறப்பு உதவியாளர் ஆகிய பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. குரூப் 4 தேர்வு மூலம் கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ), டைப்பிஸ்ட், ஸ்டெனோ டைபிஸ்ட், இளநிலை உதவியாளர், பில் கலெக்டர், நில அளவையாளர் ஆகிய பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

இந்நிலையில், குரூப் 4 தேர்வு ஜூலை 24-ம் தேதி காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெற உள்ளது. இதில், 7,301 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு டிஎன்பிஎஸ்சி-யின் https://www.tnpsc.gov.in/ என்ற இணைய தளத்தில் பார்க்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *