• Thu. Dec 11th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

நகை பணத்துக்காக குழவிக்கல்லை தலையில் போட்டு மூதாட்டி கொலை:

By

Sep 8, 2021 , ,

நாமக்கல் மாவட்டம் மோகனூர் நேரு நகர் பகுதியில் கணவனை இழந்த நிலையில் மாராயி என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை வெகுநேரமாகியும் மூதாட்டி வீட்டின் கதவு திறக்காததால் மற்றொரு வீட்டில் குடியிருந்த காளிதாஸ் எனபவர் பேரன் கணேசனுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த மாராயின் உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது மூதாட்டியின் தலையில் காயங்களுடன் சடலமாக கிடந்துள்ளார். இதனையடுத்து, காவல் நிலையத்தில் தகவல் அளிக்கப்பட்டதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

காவல் துறையினர் சந்தேகத்தின் பேரில் காளிதாஸை விசாரித்தனர். இதில் மூதாட்டி வைத்திருந்த நகை மற்றும் பணத்தை திருட சென்ற போது பாட்டி எழுந்து கொண்டதால் அருகில் இருந்த சிறிய குழவி கல்லால் அவரது தலையில் அடித்து கொலை செய்து விட்டதாக தெரிவித்தார். இதனையடுத்து காளிதாஸை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். நகை பணத்துக்காக தான் குடியிருந்த வீட்டின் உரிமையாளரையே கொலை செய்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.