• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

19 வயதில் கிராண்ட்ஸ்லாம் பட்டம் ஸ்பெயின் வீரர் அல்காரஸ் அசத்தல்

ByA.Tamilselvan

Sep 13, 2022

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் 19 வயது ஸ்பெயின் வீரர் அல்காரஸ் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று அசத்தியுள்ளார்.
பாரம்பரியமிக்க அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் 142-வது சீசன் இளம் வீரர் – வீராங்கனைகளின் அதிரடியால் கடந்த காலங்களை விட நடப்பு சீசன் தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்றது. மகளிர் ஒற்றையர் பிரிவில் போலந்து நாட்டின் ஸ்வியாடெக் சாம்பியன் பட்டம் வென்ற நிலை யில், தொடரின் இறுதி நிகழ்வான ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் அதிரடி வீரர் அல்காரஸ் (19 – ஸ்பெயின்), தரவரிசையில் 5-வது இடத்தில் இருக்கும் நார்வேயின் ரூத்தை (23) எதிர்கொண்டார். இந்திய நேரப்படி திங்களன்று அதிகாலை நடை பெற்ற இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய அல்காரஸ் 6-4, 2-6, 7-6 (7-1), 6-3 என்ற செட் கணக்கில் ரூத்தை வீழ்த்தி முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்று 19 வயதில் கிராண்ட்ஸ்லாம் வரலாறுடன் இளம் வயதில் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவர்கள் பட்டியலில் இணைந்தார்.