
சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் தொடர் நங்கம்பாக்கம் எஸ்டிஏடி மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இந்தியாவின் அங்கிதா, ரெய்னா,கர்மன் தண்டி, அமெரிக்காவி ன் அலிசன்ரிஸ்கே உள்ளிட்ட முன்னணி வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். தினமும் மாலை 5மணிக்கு தொடங்கும் போட்டிக்கான டிக்கெட்டை chennaiopenwta.in என்ற இணையதளத்தில் பெறலாம். சென்னையில் முதல்முறையாக சர்வதேச பெண்கள் டென்னிஸ் தொடர் நடக்க உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
