• Tue. Apr 30th, 2024

டெல்லியில் நாளை பிராம்மாண்ட பேரணி : வீடு வீடாக அழைப்பு

Byவிஷா

Mar 30, 2024

இந்திய கூட்டணி கட்சிகள் சார்பில் நாளை டெல்லியில் நடைபெறும் பிரம்மாண்ட பேரணியில் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என ஆம் ஆத்மி கட்சி சார்பில் வீடு வீடாகச் சென்று அழைப்பு கொடுத்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் நாளை பிரமாண்ட பேரணி டெல்லியில் நடைபெறுகிறது. இந்தப் பேரணியில் திரளாக வந்து கலந்து கொள்ளும்படி ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் வீடு வீடாக சென்று அழைப்பு விடுத்து வருகிறார்கள்.
அப்போது பல்வேறு இடங்களில் அவர்கள் மெழுகுவர்த்தி ஊர்வலம் நடத்தினார்கள். ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி ஒருங்கிணைப்பாளரும் அமைச்சருமான கோபால் ராய், ரெகர்புரா மற்றும் கரோல் பாக் பகுதியில் வீடு வீடாக சென்று நாளை ராம்லீலா மைதானத்தில் நடைபெற இருக்கும் பிரம்மாண்ட பேரணியில் கலந்து கொள்ளும்படி வீடு வீடாக சென்று பொது மக்களுக்கு அழைப்பு விடுத்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கோபால் ராய்..,
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரை மத்திய பாஜக அரசு கைது செய்த நாள் முதல் மக்கள் கடும் கோபத்தில் இருப்பதை தன்னால் பார்க்க முடிந்தது என்று தெரிவித்தார்.
இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள முக்கிய தலைவர்கள் அனைவரும் இந்த பேரணியில் பங்கேற்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார். ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏ சோம்நாத் பார்தி டெல்லி காண்ட் பகுதியில் மக்களுக்கு அழைப்பு விடுத்துக் கொண்டிருந்தபோது தன்னையும் மற்றொரு எம்.எல்.ஏ வீரேந்திர கார்டியனையும் போலீசார் தடுத்து நிறுத்தியதாக குற்றம் சாட்டினார்.
144 தடை உத்தரவு அமலில் இருப்பதை காரணம் காட்டி போலீசார் தங்களை தடுத்ததாகவும் ஆனால் உத்தரவு பற்றி எந்த ஆவணங்களையும் போலீசார் தங்களுக்கு காட்டவில்லை என்றும் அவர் தெரிவித்தார். “ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்களை சிறையில் அடைக்கவும் பின்னர் கட்சி வேட்பாளர்களை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடாமல் தடுக்கவும் பாஜக திட்டமிட்டு வருகிறது” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
நாடு முழுவதிலும் இருந்து நாளைய பேரணியில் அனைத்து கட்சி தொண்டர்கள் பங்கேற்க இருக்கிறார்கள். பக்கத்து மாநிலமான பஞ்சாபில் இருந்து திரளான தொண்டர்கள் கலந்து கொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *