கோவை பூ மார்க்கெட் அருகில் உள்ளஹைதர் அலி திப்பு சுல்தான் தக்னி சுன்னத் ஜமாத் மஸ்ஜித் கபரஸ்தான் ஈக்கத் பள்ளிவாசல் சார்பில் இன்று மாபெரும் கண்காட்சி நடைபெற்றது.

இந்த கண்காட்சியில் கோவை மாவட்டத்தில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக புகைப்பட கண்காட்சிகளும் மருத்துவ முகாம் மற்றும் புத்தகக் கண்காட்சிகள் நடைபெற்றன இந்த நிகழ்வில் பள்ளிவாசல் நிர்வாகம் தலைவர் ஜனாப் அகமது பாஷா. ஜனாப் முகமது ஷெரீப். நசீர். காதர்அலி. முகமது இஸ்மாயில்.நிர்வாகிகள் அனைவரும் சேர்ந்து நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தார்கள் பள்ளிவாசல் தலைவர் கூறும் பொழுது கோவை மாவட்டத்தில் நல்லிணக்கம் ஏற்படும் விதமாக இந்த நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த நிகழ்ச்சி மூன்று நாட்களுக்கு நடைபெறும் இதில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பொது மருத்துவம் மது பழக்கத்திலிருந்து விடுபடுதல் கண் சிகிச்சை மூட்டு வலி எலும்பு பிரச்சனை ஆகியவை மருத்துவர்களின் ஆலோசனையும் பெற்றுக் கொள்ளலாம் என கூறினார்.







; ?>)
; ?>)
; ?>)