• Tue. Dec 10th, 2024

மேட்டூர் அணையில் இருந்து1.20 லட்சம் கன அடி தண்ணீர் திறப்பு…

ByA.Tamilselvan

Aug 29, 2022

மேட்டூர் அணையிலிருந்து காவிரியில் 1.20 லட்சம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்வதால் அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.இரு மாநில எல்லைகளிலும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் ஒகேனக்கல் காவிரியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் அப்படியே மேட்டூர் அணைக்கு வருகிறது.மேட்டூர் அணைக்கு நேற்று காலை 1 லட்சத்து 20 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலையும் அதே அளவில் வந்து கொண்டிருக்கிறது. அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டி உள்ளதால் அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.