• Tue. Apr 7th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

ஆளுநர் வருகை.., கருப்புக் கொடி போராட்டம் நடைபெற உள்ளதால், பலத்த போலீஸ் பாதுகாப்பு…

ByKalamegam Viswanathan

Nov 2, 2023

மதுரை காமராஜர் பல்கலைக்கழக 55 வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள வருகை தரும் ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி பேராட்டம் நடைபெற உள்ளதால் விமான நிலையம் .காமராஜர் பல்கலைக்கழகம் மற்றும் முக்கிய சாலைகளில் போலீசார் பலத்த பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மதுரை மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் கருப்பையா தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் நான் உங்களை பொதுகூட்டை நான்கு வழிச்சாலை நுழைவாயில் கீழக்குயில்குடி விளக்கு மற்றும் வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி மற்றும் மதுரை காமராசர் பல்கலைக்கழகம் ஆகிய பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் சந்தேகத்திற்குரிய நபர்களை மற்றும் உடைமைகளை சோதனை செய்து பின் பல்கலைக்கழக வளாகத்திற்குள் அனுமதிக்கின்றனர்.

தமிழக ஆளுநர் ஆர் என் ரவி மதுரை காமராஜர் பல்கலைக்கழக 55லது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள வருவதையொட்டி சுதந்திரப் போராட்ட வீரர் சங்கரய்யாவிற்கு டாக்டர் பட்டம் வழங்காததை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருப்புகொடி காட்டி எதிர்ப்பு தெரிவிப்பதையொட்டி மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் விமான நிலையம் மற்றும் முக்கிய சாலைகளில் போலீசார் பலத்த பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.