சமூக வலைதளங்களில் அரசு ஊழியர் ஒருவர் மது குடிக்கும் வீடியோ மிக வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் சம்பந்தப்பட்ட அதிகாரி, தொலைபேசியில் எதிர் முனையில் இருக்கும் ஒருவரிடம் ஒழுங்காக கொரோனா பரிசோதனைகள் மேற்கொள் என பேசுகிறார்.
இதனையடுத்து அவர் மேசையின் முன்னால் மதுபானம் மற்றும் கிளாஸ் இருக்கிறது, சைட் டிஷையும் உண்கிறார் அந்த அதிகாரி. இந்த வீடியோ தான் தற்போது சமூக வலைதளத்தில் வைரல்.
இந்த வீடியோவில் இருக்கும் நபர் குறித்து முதற்கட்ட தகவல் கிடைத்துள்ளது செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்லாவரம் பகுதியில் உள்ள சி – பிரிவு அலுவலகத்தில், மாநகராட்சியின் பகுதி மேற்பார்வையாளராக ராகவன் என்பவர் பணிபுரிந்து வருகிறார்.
இந்த நபர்தான் அடிக்கடி வேலை சமயத்தில் மது அருந்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த வீடியோவை நகராட்சியில் வேலை செய்யும் நபர் எடுத்தாரா, அல்லது பொதுமக்கள் வீடியோ எடுத்தனர் என்பது குறித்த எந்தவித தகவலும் தற்போது வெளியாகவில்லை.






; ?>)
; ?>)
; ?>)
