• Tue. Nov 11th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

அரசு டாக்டர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்..,

ByT. Balasubramaniyam

Nov 11, 2025

அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தின் முன்பு , தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் அரியலூர் மாவட்ட கிளை சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவனியீர்ப்புஆர்ப்பாட்டம்நடைபெற்றது.

கவனஈர்ப்புஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் அரியலூர் மாவட்ட கிளை செயலாளர் மருத்துவர் குணசேகரன் தலைமை தாங்கினார். கவன ஆர்ப்பாட்டத்தில் JR போஸ்ட் குறைக்க கூடாது,போதிய மருத்துவர்கள், செவிலியர்கள் மருத்துவம் சார்ந்த பணியாளர்கள் இல்லாமல் புது மருத்துவக்கல்லூரிகள் தொடங்க கூடாது,

அனைத்து மருத்துவம் சார்ந்த பணியாளர்களின் காலியானபணியிடங்களை உடனே நிரப்பிட வேண்டும்,ஆளில்லா புது கட்டிடங்கள் இயங்க அனுமதிக்க கூடாது. செவிலியர்கள் உள் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குறைந்த பட்ச NMC தகுதியை பொறுத்து மட்டும் முன்னுரிமை கொடுக்காமல் மருத்துவ பயனாளிகளையும் கணக்கில் கொண்டு மருத்துவர்களை பணியில் அமர்த்திட வேண்டும். தவிர அதிகபடுத்த வேண்டிய தருணத்தில் குறைப்பது கூடாது உள்ளிட்ட கோரிக்கை களை தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை நிறைவேற்றவலியுறுத்தி மருத்துவர்கள் கோஷமிட்டனர்.

இக்கவனஈர்ப்புஆர்ப்பாட்டத்தில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் நாகராஜன், கார்த்திகேயன், சரவணன், ஏகநாதன், பாரதிராஜா, சுகன்யா,வினோதினி ,உமா,சண்முகப்பிரியா,மணிகண்டன்,உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.