• Wed. Mar 4th, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

அரசு பேருந்தும் காரும் மோதிக்கொண்ட விபத்து

திருநெல்வேலியில் இருந்து அரசு பேருந்து ஒன்று நாகர்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்தது. பேருந்து  தோவாளை அருகே விசுவாசபுரம் பகுதியில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே வந்த போது, லாரியை முந்தி சென்றுள்ளது. அப்போது சொகுசு கார் ஓன்று அருகில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் இருந்து வெளியே சாலையில் வந்துள்ளது.

 அப்போது அரசு பேருந்து சொகுசு கார் மீது மோதி கட்டுப்பாட்டை இழந்து, அருகில் நிறுத்தி வைத்திருந்த மற்றொரு சொகுசு கார், மூன்று இருசக்கர இருசக்கர வாகனங்கள் மீது மோதி   ஹோட்டலுக்குள் புகுந்தது. அதிர்ஷ்டவசமாக கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் ஏற்படவில்லை.  இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.