• Wed. Dec 10th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

புதுச்சேரிக்கு புதிதாக 6 மதுபான தொழிற்சாலைகளுக்கு அரசு அனுமதி

ByB. Sakthivel

Mar 13, 2025

புதுச்சேரிக்கு புதிதாக 6 மதுபான தொழிற்சாலைகளுக்கு அரசு அனுமதி அளித்துள்ளதாக முதலமைச்சர் ரங்கசாமி சட்டப்பேரவையில் அறிவித்தார்.

புதுச்சேரி சட்டப்பேரவையில் துணைநிலை ஆளுநரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் பிரேரணை மீது உறுப்பினர்கள் பேசினார்கள்.

இறுதியாக முதலமைச்சர் ரங்கசாமி பேசுகையில், அரசு பொறுப்பேற்ற பிறகு வருமானம் உயர்ந்துள்ளது.தனி நபர் வருமானம் அதிகரித்துள்ளது.15 ம் தேதி துணைநிலை ஆளுநர் குஜராத் செல்கிறார்.அங்கு பிரதமரை சந்தித்து கூடுதல் நிதி,கடன் தள்ளுபடி கோரிக்கைகளை வலியுறுத்த உள்ளார் என்றார்.

அரசு துறைகளில் 10,000 காலி பணியிடங்களை நிரப்பி வருகிறோம்..இது வரை 3000 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.மீதமுள்ள பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறிய முதல் அமைச்சர், 6 மதுபான தொழிற்சாலைகளுக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. தண்ணீரை அதிகம் பயன்படுத்தாத சுற்றுச்சுழல் வகையில் பாட்டிலிங் மதுபான தொழிற்சாலைகளுக்கு தடை இல்லா சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.

இதனால் 5000 பெண்களுக்கு வேலை கிடைக்கும்.500 கோடி ரூ அளவிற்கு அரசுக்கு வருமானம் கிடைக்கும்.. வெளியில் தவறுதலாக விமர்சனம் செய்கிறார்கள் என
முதல் அமைச்சர் ரங்கசாமி தெரிவித்தார்.

மதுவிலக்கு என்ற முடிவை எடுக்க முடியுமா…? முடியாது பூர்ண மதுவிலக்கு என்றால் நான் தான் முதல் ஆதரவு தெரிவிப்பேன்.ஆனால் அது முடியாது.மதுபான தொழிற்சாலையில் வருவதால் வேலைவாய்ப்பு கிடைக்கிறது. புதுச்சேரிக்கு வருமானம் கிடைக்கிறது என குறிப்பிட்டார்.

அரசு பல சங்கடங்களும் தடைகள் இருந்தாலும் அறிவித்த திட்டங்களை செயல்படுத்தும் என்ற முதல் அமைச்சர், அரசின் கோப்புகளை விரைந்து அனுப்ப வேண்டும். எதிர்மறையான சிந்தனையோடு அதிகாரிகள் செயல்பட கூடாது எனவும் ரங்கசாமி தெரிவித்தார்.