
புதுச்சேரி லாஸ்பேட்டை தொகுதி காங்கிரஸ் கட்சி சார்பில் மகளிர் தின விழா கொண்டாட்டம் உழவர் சந்தை அருகே நடைபெற்றது. விழாவிற்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் சட்டமன்ற கட்சி தலைவருமான வைத்தியநாதன் தலைமை தாங்க சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி முன்னாள் அரசு கொறடா அனந்தராமன், மகளிர் காங்கிரஸ் தலைவி நிஷா, இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்தபாபு நடராஜன், மூத்த தலைவர் பி. கே. தேவதாஸ் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர்கள் முன்னாள் எம்எல்ஏக்கள் என அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்.

விழாவுக்கு வந்திருந்தவர்களை கமலா அறக்கட்டளை நிறுவனர் ரமா வைத்தியநாதன் அனைவரையும் வரவேற்க தொடர்ந்து மகளிர் தின விழாவில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மகளிர்களுக்கு பரிசுகளும் போட்டியில் கலந்து கொண்ட அனைத்து பெண்களுக்கும் அன்பளிப்பும் வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் லாஸ்பேட்டை தொகுதியை சேர்ந்த ஏராளமான ஆண்கள் பெண்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியை தொண்டர்கள் மற்றும் பல்வேறு அணியினர் என அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்.
