• Sun. Mar 16th, 2025

பட்ஜெட்டை மணக்க மணக்க வாசிக்கிறார் ரங்கசாமி..,

ByB. Sakthivel

Mar 12, 2025

கடந்த ஆண்டு அறிவித்த எந்த திட்டங்களையும் செயல்படுத்தாத ரங்கசாமி இந்த ஆண்டுக்காண பட்ஜெட்டை மணக்க மணக்க வாசித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சிவா விமர்சித்துள்ளார்

புதுச்சேரி சட்டப்பேரவையில் நடப்பாண்டிற்கு 13 ஆயிரத்து 600 கோடி ரூபாய்க்கு முதல் அமைச்சர் ரங்கசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த கூட்டத்தொடரில் கலந்துகொண்ட எதிர்க்கட்சித் தலைவர் சிவா செய்தியாளர்களை சந்தித்தார்..

அப்போது பேசிய அவர்..

புதுச்சேரியில் மாநில வருவாயும் இல்லாமல் மத்திய அரசு நிதி கொடையும் இல்லாமல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த முறை அறிவித்த எந்த திட்டங்களையும் செயல்படுத்தவில்லை அனைத்து திட்டங்களும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இருந்தாலும் மணக்க மணக்க முதலமைச்சர் ரங்கசாமி உரையை வாசித்தார். இந்த பட்ஜெட் என்பது ஒரு காகித பூ என விமர்சித்தார்.

இந்த பட்ஜெட்டில் முதலமைச்சரின் அறிவிப்புகள் நடைமுறைக்கு சாத்தியம் இல்லாத ஒன்று என்று குறிப்பிட்ட சிவா.. புதுச்சேரியில் மாநில வருவாய் எவ்வளவு செலவு எவ்வளவு என்பது குறிப்பிடப்படவில்லை, மேலும் கடன் வாங்கி திட்டங்களை செயல்படுத்த முடியாத நிலையும் புதுச்சேரியில் ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார்.

புதுச்சேரி மக்கள் எதிர்பார்க்கக்கூடிய தொழில் துறை கொள்கை, வியாபாரிகளுக்கான புதிய திட்டங்கள்,
ஐ.டி.பார்க் இல்லை புதிய சுற்றுலா திட்டங்கள் இல்லை என்று குற்றம் சாட்டிய சிவா,சொன்னதை மட்டுமே திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் என்றார்.

மக்களுக்கு பயனில்லாத பல விஷயங்கள் சொல்லப்பட்டுள்ளது இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை, புதுச்சேரி துறைமுகம் வருமானம் தனியாருக்கு செல்கிறது,மின்துறை தனியார் மயமாக்கப்பட்டுள்ளது, அரசு பொதுத்துறை நிறுவனங்களான பாப்ஸ்கோ, பேசிக் உள்ளிட்ட நிறுவனங்கள் மூடப்பட்டு ஊழியர்கள் தற்கொலை செய்து வருகிறார்கள், இந்த நிலையில் புதுச்சேரிக்கு வளர்ச்சி இல்லாத ஒரு பட்ஜெட்டை ரங்கசாமி தாக்கல் செய்திருக்கிறார் என்று தெரிவித்தார்.

மக்கள் எதிர்பார்ப்பது மாநில வளர்ச்சி புதுச்சேரியில் கூறை வீடுகள் கல்வீடாக மாற்றுவதற்கான திட்டம் இல்லை, மகளிர் உரிமைத்தொகை இதுவரை அறிவிக்கப்பட்ட ஆயிரம் ரூபாய் முழுமையாக வழங்கப்படவில்லை இதில் 2500 ரூபாயாக உயர்த்தி வழங்குவதாக அறிவித்திருக்கிறார்கள் இது நடைமுறைக்கு சாத்தியமில்லை
என்று தெரிவித்த சிவா அனைத்து திட்டங்களுக்கும் உத்தியோசிக்கப்பட்டுள்ளது என்று கூறுகிறார்களே தவிர எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது தெரிவிக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டினார்.