• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பார்வதி நாயரின் பட்டுப்புடவை பவனி!

தமிழில்,அஜித்குமார் நடித்த ‘என்னை அறிந்தால்’ படத்தில், அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் பார்வதி நாயர். இந்த படத்தை தொடர்ந்து, உத்தம வில்லன், கோடிட்ட இடங்களை நிரப்புக, நிமிர் போன்ற பல படங்களில் கதாநாயகியாக நடித்தார். அழகும், திறமையும் இருந்தும் இவரால் முன்னணி இடத்தை பிடிக்க முடியவில்லை.

தமிழ் மொழி தவிர மலையாளம், கன்னட மொழி படங்களிலும் நடித்துவருகிறார். அதே போல், பிரபல தனியார் தொலைக்காட்சியில் மாடல்களுக்காக ஒளிபரப்ப பட்ட நிகழ்ச்சி ஒன்றில் நடுவராகவும் இருந்தார். தற்போது பட வாய்ப்புகளை கைப்பற்ற வழக்கம்போல வித விதவிதமான சேலை மற்றும் கிளாமர் உடைகளில போட்டோ ஷூட்டுகளை நடத்த தொடங்கியுள்ளார்.

கங்கணா ரணவாத் முதல் நேற்று நாயகியாக அறிமுகமாகியுள்ள ஷங்கர் மகள் அதிதி வரை புகைப்படங்களை போட்டிபோட்டு சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர். ஆனால் எல்லோருக்கும் வாய்ப்புகள் அதிகமாக கிடைப்பதில்லை என்பதே சினிமாவின் எழுதப்படாத விதியாக உள்ளது. தற்போது இவர் கைவசம் ஆலம்பனா மற்றும் ரூபம் ஆகிய படங்கள் உள்ளன. இந்த 2 படங்களும் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளன.

இதையடுத்து பட வாய்ப்புகள் எதுவும் இல்லாததால், தற்போது விதவிதமாக போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை சமூக வலைதலங்களில் பரவவிட்டு வாய்ப்பு தேடி வருகிறார் பார்வதி. அந்த வகையில் தற்போது சேலையில் இடுப்பழகை காட்டி சிக்கென போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.