• Tue. Apr 22nd, 2025

கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து மோசடி செயலிகள் அதிரடி நீக்கம்

Byவிஷா

Mar 22, 2025

கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து பயனர்களுக்கு தீங்கை விளைவிக்கும் 331 விளம்பர மோசடி செயலிகளை அதிரடியாக நீக்கி உள்ளனர்.
ஆன்ட்ராய்டு பயனர்கள் ஒரு மொபைல் செயலியை பாதுகாப்பாக பதிவிறக்கம் செய்யும் நம்பிக்கை மிக்க தளமாக கூகுள் பிளே ஸ்டோர் உள்ளது. இந்த கூகுள் பிளே ஸ்டோரில் பாதுகாப்பான செயலிகள் தான் அதிகம் இருக்கும். ஆனாலும், சில சமயம் பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக, சில விஷமதனமான வேலைகளை செய்யும் செயலிகள் இருக்கும்.
அந்த வகையில், சைபர் பாதுகாப்பில் நிபுணத்துவம் பெற்ற நிறுவனமான பிட் டிஃபெண்டரின் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள், கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து 331 தீங்கிழைக்கும் மற்றும் விளம்பர மோசடி செயலிகளை கண்டறிந்துள்ளனர். ஆண்ட்ராய்டு 13 இல் உள்ள பாதுகாப்பு அம்சங்களைத் தவிர்த்து, மொத்தமாக 60 மில்லியனுக்கும் அதிகமான பதிவிறக்கங்களைக் கொண்டுள்ளது.
இதில், AquaTracker, Scan Hawk, ClickSave Downloader, Be More, Water Time Tracker, TranslateScan ஆகிய ஒவ்வொரு செயலிகளையும் தலா 1 மில்லியன் (10 லட்சம்) பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இந்த செயலிகள் பயனர்களுக்கு அனுமதியின்றி கட்டாய விளம்பரங்களை காட்டியதாகவும், பயனர்கள் செல்போனை பயன்படுத்தாத சமயத்திலும் பின்னால் இயங்கி வந்ததும் கண்டறியப்பட்டுள்ளது. அந்த வகையில், பயனர்களுக்கு விரும்பத்தகாத வேலைகளை செய்வது உள்ளிட்ட பல்வேறு காரணங்களுகாக 331 செயலிகளும் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.