யூடியூப் கோ சேவையை நிரந்தரமாக நிறுத்தப்போவதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.யூடியூப் சேவையில் இலகுரக மாற்றான (light version) “Youtube Go” சேவை பல ஆண்டுகளாகப் பொதுமக்களால் பயன்படுத்தப்படாமல் உள்ளது.
எனவே, இந்த சேவையை நிரந்தரமாக நிறுத்தப்போவதாக தன் அதிகாரப் பூர்வ பக்கத்தில் யூடியூப் நிறுவனம் அறிவித்துள்ளது.யூடியூப் கோ சேவை குறைந்த வேகமுடைய இணையதள இணைப்பு மற்றும் குறைந்த விலை கைப்பேசிகளைக் கொண்ட பயனர்களுக்காக உருவாக்கப்பட்டது. பல ஆண்டுகளாகப் போதிய பயனர்கள் இதைப் பயன்படுத்தாத நிலையிலும், தொடர்ந்து, யூடியூப் கோ சேவையாற்றியது. இந்நிலையில், யூடியூப் கோ சேவை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, கூகுள் நிறுவனம் தன் அதிகாரப்பூர்வ பக்கத்தில், யூடியூப் கோ ஆகஸ்ட் மாதம் முதல் நிறுத்தப்படும். யூடியூப்-ஐ பயன்படுத்துவதற்கு, யூடியூப் கோ பயனாளர்கள் யூடியூப் பயன்பாட்டை நிறுவுமாறு பரிந்துரைக்கிறோம். அல்லது இணையதளங்கள் மூலம் youtube.com ஐ பார்வையிடவும். யூடியூப் கோ உடன் ஒப்பிடும்போது, யூடியூப் சிறந்த அனுபவத்தைப் பயனாளர்களுக்கு வழங்குகிறது.
மேலும், யூடியூப்-இல் யூடியூப் கோ-இல் இல்லாத கருத்துத் தெரிவிக்கும் ஆப்சன், போஸ்ட் ஆப்சன், டார்க் மோட் ஆப்சன் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன. குறைந்த விலை கைப்பேசி, குறைந்த வேகம் கொண்டு நெர்வொர்க்குகளில் youtube-ஐ பயன்படுத்தும் சாதனங்களுக்கான செயல்திறனை மேம்படுத்தியுள்ளோம் எனத் தெரிவித்துள்ளது.Youtube Go சேவை நிறுத்தப்படவுள்ளதால் குறைந்த விலை கைப்பேசிகளை வேகமாக இயக்க அனுமதிக்கும் ஆண்டிராய்டின் லைட் வெர்ஷனான Android Go-வின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.