• Fri. Dec 19th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

ரயில் பயணத்தை மட்டுமே விரும்பும் தென்மாவட்ட சொந்தங்களுக்கு ஒரு நற்செய்தி.

நாகர்கோவிலில் இருந்து தினமும் சென்னை தாம்பரத்திற்கு அந்தோத்யா விரைவு ரயில் இயக்கப்படுகிறது.


இதன் சிறப்பம்சம் என்னவென்றால், மற்ற ரெயில்களில் 2,3 பெட்டிகள் மட்டுமே பொதுப்பெட்டியாக இருக்கும்.ஆனால் அந்தோத்யா ரயிலில் 23 பெட்டிகளும் நவீன வசதிகளுடன் பொதுப்பெட்டியாக (GENERAL/UNRESERVED) இயக்கப்படுகிறது. இந்த ரயிலுக்கு முன்பதிவு இல்லை.

சென்னைக்கு டிக்கெட் விலை 280 ரூபாய்..சீனியர் சிட்டிஸன் என்றால் 155 ரூபாய் மட்டுமே.நாகர்கோவிலில் மாலை மணி 03.50 க்கு புறப்படும். இந்த ரயில் திருநெல்வேலி 05.10pm , மதுரை 08.30pm , திருச்சி 10.45pm தஞ்சாவூர் 11.38pm விழுப்புரம் 04.40am மார்க்கமாக மறுநாள் காலை 7மணிக்கு சென்னை தாம்பரம் சென்றடைகிறது. பேருந்தில் 1000 ரூபாய் செலவழிக்க விருப்பமில்லாதவர்கள், மற்றும் வயாசனவர்கள்,குழந்தைகள் என ரயில் பயணத்தை மட்டுமே நம்பி இருப்பவர்கள் இந்த ரயிலை பயன்படுத்திகொள்ளலாம்.